LIC Policy: வெறும் 100 ரூபாய்க்கு 75,000 ரூபாய் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும் அட்டகாசமான பாலிசி இதோ

அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) ஆம் ஆத்மி பீமா யோஜனா ஒரு மிகச்சிறந்த தீர்வாகும். இது வாழ்நாளுக்கான பாதுகாப்பை வழங்குகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 27, 2021, 05:16 PM IST
  • அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் நபர்களுக்கு, LIC-யின் ஆம் ஆத்மி பீமா யோஜனா ஒரு மிகச்சிறந்த தீர்வாகும்.
  • கிராமப்புற நிலமற்ற குடும்பங்களுக்காக தொடங்கப்பட்ட ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாகும் இது.
  • 100 ரூபாய் மட்டுமே செலுத்தி பாலிசிதாரர்கள் இந்த அற்புதமான LIC திட்டத்தின் பயனைப் பெறலாம்.
LIC Policy: வெறும் 100 ரூபாய்க்கு 75,000 ரூபாய் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும் அட்டகாசமான பாலிசி இதோ  title=

LIC Policy: COVID-19 தொற்றுநோய்க்குப் பிறகு, மக்கள் தங்கள் சுகாதார காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள் குறித்து மேலும் விழிப்புணர்வு பெற்றுள்ளனர். சாமானிய மக்களுக்கு சுகாதார மற்றும் ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளை வழங்குவதில் இந்திய அரசும் (GoI) பல நடவடிக்கைகளை முடிக்கி விட்டுள்ளது. இவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளைச் சாராதவர்களாகவும் இருக்கலாம். அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) ஆம் ஆத்மி பீமா யோஜனா ஒரு மிகச்சிறந்த தீர்வாகும். இது வாழ்நாளுக்கான பாதுகாப்பை வழங்குகிறது.

LIC ஆம் ஆத்மி பீமா யோஜனா அம்சங்கள்

மேலே குறிப்பிட்டுள்ளபடி, பாலிசி காலத்தில் இயற்கையான மரணம் ஏற்பட்டால் காப்பீட்டாளருக்கு LIC ஆம் ஆத்மி பீமா யோஜனா (LIC Aam Aadmi Bima Yojana) ரூ .30,000 ஆயுள் காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது. அதாவது LIC பாலிசியின் காலத்திற்குள் பாலிசிதாரர் இறந்தால், நாமினிக்கு மொத்தம் ரூ. 30,000 வழங்கப்படும். இது தவிர, காப்பீட்டு காலத்தின் போது விபத்து ஏற்பட்டு மரணித்தாலோ அல்லது விபத்தால் ஊனமுற்றாலோ இந்த பாலிசியின் நன்மைகள் பாலிசிதாரர் அல்லது அவரது நாமினிக்கு கிடைக்கும்.

LIC ஆம் ஆத்மி பீமா யோஜனாவின் அம்சங்கள்

LIC ஆம் ஆத்மி பீமா யோஜனா விவரங்களின்படி, LIC பாலிசிதாரர் விபத்தால் ஊனமுற்றால் அவருக்கு ரூ .37,500 கிடைக்கும். பாலிசிதாரருக்கு விபத்தால் மரணம் ஏற்பட்டால் நியமனதாரருக்கு (Nominee) ரூ .75,000 ஆயுள் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

இந்த பாலிசியைப் பற்றிய நிபுணர்களின் கருத்து

LIC ஆம் ஆத்மி பீமா யோஜனா குறித்து பேசுகையில், செபியால் அங்கீகரிக்கப்பட்ட வரி மற்றும் முதலீட்டு நிபுணர் ஜிதேந்திர சோலங்கி, " LIC ஆம் ஆத்மி பீமா யோஜனா இரண்டு முக்கிய சமூக திட்டங்களான ஆம் ஆத்மி பீமா யோஜனா மற்றும் ஜனஸ்ரீ பீமா யோஜனா ஆகியவற்றின் இணைப்பின் விளைவாகும். இது கிராமப்புற நிலமற்ற குடும்பங்களுக்காக தொடங்கப்பட்ட ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாகும். குடும்பத்தில் ஒரு உறுப்பினர் (பொதுவாக குடும்பத்தின் தலைவர்) இந்த திட்டத்தின் கீழ் கவர் செய்யப்படுவார். மத்திய அரசும் மாநில அரசும் பிரீமியம் கட்டணத்தை சமமாக பகிர்ந்து கொள்கின்றன." என்றார்.

ALSO READ: LIC அளிக்கும் அதிரடி offer: காலம் கழிந்த பாலிசிகளை மீண்டும் துவக்க தள்ளுபடியுடன் வாய்ப்பு

இந்த பாலிசியின் பிற நன்மைகள்

இந்த LIC ஆம் ஆத்மி திட்டத்தில் இருக்கும் பிற நன்மைகள் குறித்து சோலங்கி கூறுகையில், "இந்த LIC பாலிசி நன்மைக்கு கூடுதல் சேர்க்கையை வழங்குகிறது. இதில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பயனாளியின் இரண்டு குழந்தைகளுக்கு மாதத்திற்கு 100 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்" என்றார். LIC ஆம் ஆத்மி பீமா யோஜனா நோடல் ஏஜென்சி மாதிரியை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் கூறினார். நோடல் ஏஜென்சிகளில் பஞ்சாயத்துகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் அடங்கும். இந்த திட்டத்தில் சேர நோடல் ஏஜென்சி, அருகிலுள்ள ஓய்வூதியம் மற்றும் குழு திட்ட அலுவலகம் அல்லது எந்த LIC அலுவலகத்துடனும் தொடர்பு கொள்ளலாம்.

தகுதி மற்றும் பிரீமியம்

LIC ஆம் ஆத்மி பீமா யோஜனாவில் 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்கள் சேரலாம்.

LIC ஆம் ஆத்மி பீமா யோஜனாவின் பிரீமியம் தொகை (Premium Amount) ஆண்டுக்கு ரூ .200 ஆகும். இதில் 50 சதவீதம் அதாவது ரூ .100 மாநில அல்லது யூனியன் பிரதேச அரசாங்கத்தால் செலுத்தப்படும். ஆகையால், LIC பாலிசிதாரர் ரூ .100 மட்டும் செலுத்தினால் போதும். 100 ரூபாய் மட்டுமே செலுத்தி பாலிசிதாரர்கள் இந்த அற்புதமான LIC திட்டத்தின் பயனைப் பெறலாம்.

ALSO READ: LIC IPO: ஒரு கோடி டீமேட் கணக்குகளை திறக்க முடிவு, இந்த IPO-ஐ தவற விடாதீர்கள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News