இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வீடு தேடி பிரச்சனை வரும், ஜாக்கிரதை

ராசிபலன் ஜனவரி 29 2022: ஊடகம், மருத்துவம், கலை, காவல் துறை சார்ந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 29, 2022, 06:02 AM IST
  • கன்னி ராசிக்காரர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்
  • ரிஷபம் ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் நிலையற்ற தன்மை ஏற்படலாம்.
  • கும்ப ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வீடு தேடி பிரச்சனை வரும், ஜாக்கிரதை title=

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்... எது எப்படியிருந்தாலும், நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என கடவுளை சரணாகதி அடைந்தால், எந்நாளும் நன்னாளே...   

மேஷம்: மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியாக காணப்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

ரிஷபம்: குழந்தைகளின் வழியில் சுபச்செலவுகள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கான முதலீடுகள் மற்றும் உதவிகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

ALSO READ | ஷ்ஷ்.. இந்த ராசிக்காரங்ககிட்ட எப்பவும் உங்க ரகசியத்த சொல்லாதீங்க: டண்டோரா போட்டுடுவாங்க 

மிதுனம்: தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வரவுக்கேற்ற செலவுகள் உண்டாகும். வியாபார பணிகளில் சிறு மாற்றங்களின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவுகளும், பாராட்டுகளும் கிடைக்கும்.

கடகம்: வியாபாரம் தொடர்பான பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கல்வி தொடர்பான பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத தகவல்களின் மூலம் சில மாற்றங்கள் உண்டாகும்.

சிம்மம்: கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வாடிக்கையாளர்களின் அறிமுகம் மற்றும் புதிய நபர்களின் ஆதரவின் மூலம் லாபம் ஏற்படும்.

கன்னி: உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுகமான தடைகளை அறிந்து கொள்வீர்கள். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும்.

ALSO READ | ஜோதி வடிவாய் அருளும் ஈசனின் 12 ஜோதிர்லிங்கங்களின் சிறப்புகள்

துலாம்: குழந்தைகளின் விஷயத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பார்த்த தனவரவுகள் மற்றும் முயற்சிக்கேற்ற அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும். எந்தவொரு செயலையும் திட்டமிட்டு செயல்படுத்துவதன் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.

விருச்சிகம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். தனவரவுகள் அதிகரிக்கும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த சோர்வுநிலை குறையும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

தனுசு: புதிய தொழில் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். எண்ணிய பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் செயல்படவும்.

மகரம்: தனவரவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும். பெரியோர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்கள் தொடர்பான எண்ணங்கள் மற்றும் முயற்சிகள் ஈடேறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்: மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். உடலில் ஒருவிதமான சோர்வான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளின் மூலம் அனுபவம் ஏற்படும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.

மீனம்: குடும்ப உறுப்பினர்களிடம் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

ALSO READ | கஜமுகன் கணபதி முழுமுதற் கடவுளான வரலாறு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News