மக்களே உஷார்!... உங்கள் WhatsApp-யை செயலிழக்கச் செய்யும் Text Bomb!

வாட்ஸ்அப்பை செயலிழக்கச் செய்யும் டெக்ஸ்ட் பாம் (Text Bomb) என்ற பிழை தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..!

Last Updated : Sep 9, 2020, 09:31 AM IST
மக்களே உஷார்!... உங்கள் WhatsApp-யை செயலிழக்கச் செய்யும் Text Bomb! title=

வாட்ஸ்அப்பை செயலிழக்கச் செய்யும் டெக்ஸ்ட் பாம் (Text Bomb) என்ற பிழை தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..!

தற்போதைய வாழ்க்கை முறையில் WhatsApp ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தகவல்தொடர்பு செயலிகள் இருந்தாலும், வாட்ஸ்அப் மிகவும் பிரபலமானது. ஏனென்றால், அதன் பயனர்களுக்கு அனைத்து வகையான வசதிகளையும் வழங்க முயற்சிக்கிறது. இந்நிலையில், சில ஹேக்கர்கள்  வாட்ஸ்அப் பயனர்களின் தகவல்களைத் திருட முயல்கின்றனர். சில வித்தியாசமான பிழைகள் மூலம் செயலியை செயலிழக்கச் செய்கின்றனர். இந்த வரிசையில் வாட்ஸ்அப்பை செயலிழக்கச் செய்யும் டெக்ஸ்ட் பாம் (Text Bomb) என்ற பிழை தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், WABetaInfo புதிய யோசனைகளைப் பகிருமாறு வாட்ஸ்அப் பயனர்களைக் கேட்டுக்கொண்டது, இதற்காக அதன் டிவிட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டைப் பகிர்ந்து கொண்டது. இதில் @Ian_Oli_01 என்ற பயனர் சில ஸ்கிரீன் ஷாட்களை கிண்டலாகப் பகிர்ந்து கொண்டார். WABetaInfo-யை முதலில் மாற்றியமைக்கப்பட்ட வாட்ஸ்அப் பதிப்புகள் கொண்ட சரியான "க்ராஷ்கோட் பாதுகாப்பு" வடிவமைக்குமாறு அவர் கமெண்ட் செய்திருந்தார்.

ALSO READ | மொபைல் எண் இல்லாமல் இனி வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்... நீங்கள் செய்ய வேண்டியது இதோ!!

வாட்ஸ்அப்பில் ஆன்டி-கிராஷ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, வாட்ஸ்அப்பை உறைய வைக்க அல்லது செயலிழக்க வடிவமைக்கப்பட்ட பக்குகள் ஏராளமாக உள்ளன, பெரிய யூனிகோட் தரவுத்தளத்தைப் போன்ற 'க்ராஷ்கோட் பாதுகாப்பு' கொண்ட மாற்றியமைக்கப்பட்ட வாட்ஸ்அப் பதிப்புகளும் உள்ளன, இதிலிருந்து பயனர்களைப் பாதுகாக்க அதிகாரப்பூர்வ பயன்பாட்டில் பாதுகாப்பு அம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கு WABetaInfo பதிலளித்துள்ளது, சில வாரங்களுக்கு முன்பு இந்த பிரச்சினையை கவதிவிட்டோம், இதைப் "பினாரியோ (Binario)" என்றும், " காண்டாக்ட் பாம்ஸ் (Contact bombs)" என்றும், "டிராவா ஜாப் (Trava Zap)" என்றும், "க்ராஷர்ஸ் (Crashers)" என்றும் அல்லது வெறுமனே "message/vcard crash" என்றும் இதைக் குறிப்பிடுகின்றனர்.

தகவல்களின்படி, இது முதலில் பிரேசிலில் இருந்து உருவானது, இப்போது உலகளவில் பரவி வருகிறது. இந்த Contact bombs வழக்கமாக சில சிறப்பு எழுத்துக்களைக் கொண்டிருக்கின்றன, அவை திறந்தவுடன் பயன்பாட்டை செயலிழக்கச் செய்கின்றன. நீங்கள் அத்தகைய செய்தியைப் பெற்றால், செய்தி வந்த அரட்டையை நீக்கவும். மேலும், இதுபோன்ற செய்திகளை அனுப்ப வேண்டாம், இது ஹேக்கர்களை இதுபோன்ற உரை குண்டுகளை உருவாக்க ஊக்குவிக்கும்.

Trending News