வங்கி ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: தவறுகளை மன்னிக்க முடியாது- எச்சரித்த உச்சநீதிமன்றம்

Bank News: 21 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து நீக்கப்பட்ட வங்கி எழுத்தரின் வாதங்களை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. வங்கியில் பணிபுரிவது மிகவும் பொறுப்பான பதவியாகக் கருதப்படுவதாகவும், தவறு செய்த ஊழியரை பணியில் இருந்து நீக்குவது நியாயமானது என்றும் நீதிமன்றம் கூறியது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 13, 2022, 10:24 AM IST
  • வங்கியில் பணிபுரிபவராக இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள்.
  • பணியில் அலட்சியமாக இருந்தால் வேலையை இழக்க நேரிடும்.
  • உச்ச நீதிமன்றம் கடுமையாக உத்தரவிட்டது.
வங்கி ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: தவறுகளை மன்னிக்க முடியாது- எச்சரித்த உச்சநீதிமன்றம் title=

வங்கியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. இப்போது வங்கி ஊழியர்கள் தங்கள் பணியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாட்டின் உச்ச நீதிமன்றம், தனது தீர்ப்பு ஒன்றில், வங்கி ஊழியர்களிடம் கண்டிப்பு காட்டி, வங்கி ஊழியர்களின் பதவி மிகவும் நம்பகமானது என்றும் பொறுப்பானது என்றும் கூறியுள்ளது. 

வங்கி ஊழியர்கள் தங்கள் பணியில் தவறு செய்தால், அவர்களது வேலையும் பறிக்கப்படலாம் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இதைப் பற்றி இந்த பதிவில் விரிவாகக் காணலாம். 

முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கண்டிப்பு 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அஜய் ரஸ்தோகி மற்றும் நீதிபதி அபய் எஸ் ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு, வங்கி எழுத்தரின் பணிநீக்க உத்தரவை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது. விசாரணையின் போது, ​​வங்கியில் பணிபுரிய நேர்மையும், கவனமும் அவசியம் என நீதிபதிகளின் அமர்வு கூறியது. 

வங்கியில் பணிபுரியும் நபர்கள் ஏதாவது முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பித்தது

விசாரணையின் போது, ​​​​கடுமையான கூற்றுகளை வெளியிட்ட நீதிபதிகள் பெஞ்ச், 'இதற்கிடையில் ஊழியர் ஓய்வு பெற்றதால், அவரது பணிக்காலத்தின் போது அவர் செய்த முறைகேடுகளை மன்னிக்க முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர் செய்த குற்றத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, அவருக்கு எந்த வித மன்னிப்புக்கும் உரிமை இல்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மென்மையான அணுகுமுறையை ஒருபோதும் அறிவுறுத்த முடியாது.' என்றனர்.

மேலும் படிக்க | IRCTC: பயணிகளுக்கு ஓர் நற்செய்தி! பிப்ரவரி 14 முதல் மீண்டும் ‘கேட்டரிங்’ சேவை! 

இந்த முழு விவகாரம் என்ன? 

இந்த வழக்கு 1973 இல் நியமிக்கப்பட்ட ஊழியர் தொடர்பானது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வங்கியில் எழுத்தர்- தட்டச்சர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டார். அவர் தனது சேவையின் போது தனது கடமைகளை நிறைவேற்றுவதில் பல கடுமையான முறைகேடுகளை செய்தார். 

இதன் காரணமாக அவர் ஆகஸ்ட் 7, 1995 அன்று இடைநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, 2 மார்ச் 1996 அன்று தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், விசாரணை அதிகாரி அவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என கண்டறிந்தார். இதற்குப் பிறகு, அவர் டிசம்பர் 6, 2000 அன்று பணிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர், உச்ச நீதிமன்றம் இறுதியாக அவரது பதவி நீக்கத்தை உறுதி செய்தது.

மேலும் படிக்க | இதுவரை காணாத மிகப்பெரிய மோசடி: வங்கிகளுக்கு ரூ. 22,842 கோடி நாமம் போட்ட நிறுவனம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News