Break Up Relationship Tips Tamil | பிரேக்அப்பிற்குப் பிறகு டேட்டிங் தொடங்க சரியான நேரம் எது என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும். பிரிந்தவுடன் மீண்டும் ரிலேஷன்ஷிப் செல்லும் முன் கவனமாக சிந்திப்பதும் அவசியம். ஏனென்றால் புதிய ரிலேஷன்ஷிப்புக்கு சென்றாலும் நீங்கள் பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். உறவு என்பது வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கம். யாருடன் பழகினாலும் ஆரம்பம் முதல் இறுதி வரை மிகுந்த கவனம் தேவை. ஏனெனில் ஒரு மோசமான உறவு உங்கள் மன ஆரோக்கியத்தை முற்றிலும் கெடுத்துவிடும். தனியாக வாழ்வது எளிதல்ல என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தனிமையைத் தவிர்க்க அவசரப்பட்டு புதிய உறவைத் தொடங்குவதும் நல்ல யோசனையல்ல. எனவே, பிரிந்த பிறகு மீண்டும் உறவில் ஈடுபட, நீங்கள் மனதளவில் அதற்குத் தயாராக உள்ளீர்களா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம்?
புதிய பார்ட்னர்
ஏற்கனவே இருந்த ரிலேஷன்ஷிப்பில் இருந்து விலகி புதிய நபருடன் பழகுவதில் தவறில்லை. ஆனால் எந்த நேரத்தில் புதிய ரிலேஷன்ஷிப்க்குள் செல்கிறீர்கள் என்பதில் இருக்கிறது உங்களின் மன ஆரோக்கியம். புதிய ரிலேஷன்ஷிப்புக்குள் சென்றவுடன் பழைய உறவை எளிதில் மறக்க வாய்ப்புள்ளது. ஆனால், அதுவே உங்களுக்கு பெரிய பிரச்சனையாகவும் மாற வாய்ப்பு இருக்கிறது.
மறப்பது சாத்தியமில்லை
ஏனென்றால் முதன்முதலாக யாருடன் நன்றாக பழகியிருக்கிறீர்களோ, அந்த நபரை மனதிலிருந்து முழுவதுமாக அகற்றுவது யாராலும் சாத்தியமில்லை. ஆனால் நீங்கள் மீண்டும் மீண்டும் உங்கள் முன்னாள் நபரின் நினைவில் மூழ்கி கிடக்கும் நேரத்தில், எப்போது பேசினாலும் அவரைப் பற்றியே அடிக்கடி குறிப்பிடுகிறீர்கள் என்றால், நீங்கள் மீண்டும் டேட்டிங் செய்யாதீர்கள். உங்களால் புதிய பார்ட்னரும் மன உளைச்சலுக்கு உள்ளாக நேரிடும்.
மேலும் படிக்க | 2025 புது வருடம் வருவதற்குள் படிக்க வேண்டிய 7 புத்தகங்கள்!!
தனியாக இருப்பது எப்படி உணர்கிறது?
நீங்கள் ஆரோக்கியமான உறவை விரும்பினால், தனியாக இருப்பதை அனுபவிக்க கற்றுக்கொள்ளும் வரை டேட்டிங் செய்யாதீர்கள். நல்ல உறவு முறிவுக்குப் பிறகு பெரும்பாலானவர்கள் தனியாக இருப்பார்கள். அப்போது யாராவது தங்களுடன் நேரத்தை செலவிட மாட்டார்களா? என ஏங்குவது இயல்பானது தான். ஆனால், உங்களை மகிழ்விக்க உடனடியாக வரும் நபர் உங்களின் எதிர்பார்ப்புகளுக்கு முழுவதும் ஏற்றவராக இல்லாமல் கூட போக வாய்ப்பு இருக்கிறது.
எப்போது ரிலேஷன்ஷிப்பில் இணைய வேண்டும்?
பழைய உறவை முழுமையாக மறந்து, அவர்களின் நினைவுகள் எந்தவகையிலும் உங்களை தொந்தரவு செய்யாதபோது, அந்த நேரத்தில் நீண்ட நாட்களாக உங்களை நன்றாக புரிந்து கொண்ட ஒருவரை சந்தித்து அவர்களுடன் ரிலேஷன்ஷிப்பில் செல்வது என்றால் தவறில்லை. இப்போது உங்களுக்கு நல்ல பக்குவம் இருக்கும். தெளிவான முடிவு எடுக்கும் திறன், எந்த விஷயத்தை எப்போது செய்ய வேண்டும்? என்ற புரிதல், எப்படி பேச வேண்டும் என்ற பார்வை எல்லாம் இருக்கும். அதனால் கவனமாக புதிய ரிலேஷன்ஷிப்பில் இணையுங்கள்.
மேலும் படிக்க | இல்லற வாழ்வில் இன்பத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்? சுதா மூர்த்தி கொடுக்கும் டிப்ஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ