ரிஷப லக்னத்தின் அதிபதி சுக்ரன் பகவானாவார். இதனால், இந்த லக்னத்தில் பிறந்த பெரும்பாலானோர் நல்ல சிவந்த மேனியுடன், தீர்க்கமான முக்கு, அகலமான தோள்கள் ஆகியவற்றை கொண்டவராக இருப்பார்கள்.
ஜோதிடத்தில், பிறந்த லக்னத்தை வைத்தை ஒருவரது குணாதசியங்களை அறிந்து கொள்ளலாம். ரிஷப லக்னத்தின் அதிபதி சுக்ரன் பகவானாவார். இதனால், இந்த லக்னத்தில் பிறந்த பெரும்பாலானோர் நல்ல சிவந்த மேனியுடன், தீர்க்கமான முக்கு, அகலமான தோள்கள் ஆகியவற்றை கொண்டவராக இருப்பார்கள். எனினும் கோபக்காரராக இருப்பார்கள். சுகபோகமான வாழ்க்கை வாழ்வதில் பெரும் விருப்பமுடையவர்கள்.
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் மிகவும் நல்ல ஆலோசகர்கள், நேர்மையான ஆலோசனைகளை வழங்குவார்கள், யாரையும் நம்ப வைத்து ஏமாற்ற மாட்டார்கள். அவர்களின் ஆரம்ப வாழ்க்கை ஒரு போராட்டமாக இருக்கலாம். ஆனால் போகப் போக வாழ்க்கை இனிமையாக இருக்கும். அவர்கள் ஆன்மீக வாதிகள், சகிப்புத்தன்மை நிரம்பியவர்கள்.
மேலும் படிக்க | Solar Eclipse: கிரகணத்தின் போது சூரியனின் அருளைப் பெற செய்ய வேண்டியவை
ரிஷபம் இரண்டாவது ராசியாகும். இந்த ராசியின் சின்னம் காளை. காளை அதாவது ரிஷபம் விவசாயத்துடன் தொடர்புடையது. காளை பூமியிலிருந்து தானியத்தை எடுக்கிறது. இது சிவன் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் கிருத்திகா நட்சத்திரத்தின் மூன்று பாதங்கள், ரோகிணியின் நான்கு பாதங்கள் மற்றும் மிருகஷீரிஷ நடசத்திரத்தின் இரண்டு பாதங்கள் ஆகியவை அடங்கும்.
காந்தம் போல ஈர்க்கும் ஆளுமை
ரிஷப லக்னத்தில் பிறந்த நபர் ஒரு நல்ல ஆலோசகர். மிகவும் நேர்மையான அறிவுரைகளை வழங்குகிறார். தனது பேச்சின் மூலம் எதிரில் இருப்பவரின் குணம் மற்றும் இயல்பு பற்றி தெரிந்து கொள்கிறார். அதற்கு ஏற்ப பேசி அவரது மனதை மாற்றுகிறார். அதனால்தான் ரிஷபம் லக்னம் உள்ளவரை ஆலோசகராக ஆக்கினால், எதிர்பார்க்கும் வெற்றிகள் கிடைக்கும். அத்தகையவர்கள் விசுவாசமானவர்கள். அவரது ஆளுமையில் ஒரு காந்த ஈர்ப்பு உள்ளது.
ஆன்மீகத்தில் நாட்டம்
ரிஷப லக்னத்தில் பிறந்த நபர், நினைத்த நேரத்தில் இடங்களை மாற்றுவதில்லை. மிகுந்த ஆலோசனைக்கு பின்னே தான் முடிவுகளை எடுக்கிறார். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம் இருக்கும். கோயில்களுக்கு செல்ல மிகவும் பிடிக்கும். மற்ற லக்னங்களுடன் ஒப்பிடும் போது இந்த லக்னம் மிகவும் கடின உழைப்பாளிகள். ரிஷப என்றால் காளை, காளையின் உதவியுடன் தான் விவசாயம் செய்ய முடியும். எனவே, புதைந்து கிடக்கும் பொருட்களை வெளிக் கொண்டு வரும் தனித் திறமை ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு உண்டு.
பாச உணர்வு
இவர்கள் குடும்பத்தின் மேல் அதிக பற்றும் பாசமும் கொண்டவர்கள். குழந்தைகள் வாழ்க்கை துணையுடன் அதிக பற்றுதலுடன் இருப்பார்கள். இவர்கள் குழந்தைகளிடம் மிகுந்த அன்பும், ஈடுபாடும் கொண்டவர். இவர்களுக்கு பாச உணர்வுகள் அதிகம் இருக்கும். குடும்பம்m சார்ந்த கடமைப் பொறுப்புக்களை தவறாமல் செய்வார்கள்.
புதன் - சனி கிரகங்கள்
ரிஷபம் லக்ன ஜாதகத்தில் சனி, சுக்கிரனின் சிறந்த நண்பராக இருப்பதால், சனி மிகவும் நல்ல பலன்களைத் தருகிறார். சனி கர்மா மற்றும் லாபத்தின் அதிபதி. இந்த லக்னத்திற்கு புதனும் சுப பலன்களைத் தருகிறார். ரிஷபம் ராசிக்காரர்களின் ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருந்தால், அப்படிப்பட்டவர் மிகவும் புத்திசாலியாக இருப்பார்.
கடின உழைப்பு
ரிஷபம் ராசிக்காரர்கள் நெருப்பு மற்றும் நீரோட்டத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும். இவர்களுக்கு வெளிர் மஞ்சள் நிறம் மங்களகரமானது. அத்தகையவர்கள் பிரகாசமான சிவப்பு நிற ஆடைகளை அணியக்கூடாது. வெளிர் மஞ்சள் தவிர, நீல நிறத்தையும் அணியலாம். அத்தகைய நபர் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். கடின உழைப்பின் மூலம் ரிஷப ராசியின் காரக கிரகமான சனி மகிழ்ச்சியுடன் இருப்பார். கர்மவினைக்கும், லாபத்திற்கும் அதிபதியாக இருப்பதால், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கடின உழைப்பின் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR