அமெரிக்காவை சேர்ந்த 24 வயது இளம் தாய் ஒருவர், தனது தாய் பாலினை பதப்படுத்தி விற்கும் தொழில் மேற்கொண்டு வருகின்றார். இதன்மூலம் இவர் இதுவரை சுமார் 3 லட்சம் (இந்திய மதிப்பில்) ஈட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!
பிரபல உணவகம் ஒன்றில் பணிப்பெண்னாக இருப்பவர் ரஃபேல் லாம்ப்ரூ, இவருக்கு சமீபத்தில் ஆன்ஜிலோ என்னும் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தன் மகனுக்கு பால் ஊட்டிய பின்னரும் அவருக்கு தாய் பால் சுரப்பது நிற்கவில்லை.
தேவைக்கு அதிகமாகவே பால் சுரப்பதினை அறிந்த ரஃபேல் லாம்ப்ரூ மருத்துவரை அனுகினார். இது இயல்பான விஷயம் எனவும், இதை தடுப்பதற்கு பதிலாக தாய் பால் இன்றி தவிக்கு குழந்தைகளுக்கு ஏன் இந்த தாய்பாலை விற்க கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
பின்னர் தன் கணவர் உதவியுடம் ரஃபேல் லாம்ப்ரூ தன் தாய் பாலினை பதப்படுத்தி பேஸ்புக் குழு ஒன்றின் மூலம் விற்க தொடங்கினார். முதலில் தாய்பால் பற்றாக்குறை கொண்ட பெண்களுக்கு மட்டுமே விற்கப்பட்ட இந்த பால் ஆனது பின்னர் முகம் தெரியாத நபர்கள் பலருக்கும் விற்கப்பட்டுள்ளது.
இந்த முகம் தெரியாத நபர்களில் சில ஆண்களும் உள்ளனர் எனவும், உடற்பயிற்சி மீது ஆர்வம் கொண்ட சில ஆண்கள் இந்த பாலினை வாங்கி அருந்துவதாகவும் பின்னர் ரஃபேல் லாம்ப்ரூ-க்கு தெரியவந்துள்ளது.
எனினும் ரஃபேல் லாம்ப்ரூ தன் விற்பனையின் நிறுத்தவில்லை. தொடர்ந்து மேற்கொண்டு தான் வருகிறார். இதுவரை அவர் சுமார் 17000 அவுன்ஸ் தாய் பாலினை விற்றுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.