Amazon, Flipkart, Myntra: தீபாவளிக்கு சிறந்த ஆபர் வழங்கும் தளம் இதுதான்!

பிளிப்கார்ட், அமேசான், நைகா, மிந்த்ரா மற்றும் அஜியோ போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Oct 16, 2022, 08:31 AM IST
  • தீபாவளி பண்டிகைக்கு பலர் ஆபர்களை வழங்கி வருகின்றனர்.
  • ஆன்லைன் தளங்கள் சிறந்த ஆபர்களை தருகிறது.
  • கிரெடிட் கார்டுகளுக்கு பல ஆபர்கள் கிடைக்கிறது.
Amazon, Flipkart, Myntra: தீபாவளிக்கு சிறந்த ஆபர் வழங்கும் தளம் இதுதான்! title=

ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் சாதாரண நாட்களிலேயே மக்களுக்கு பல தள்ளுபடிகளை வழங்கும், அதிலும் இப்போது பண்டிகை காலம் என்பதால் கேஜெட்டுகள், நவநாகரீக உடைகள், மேக்கப் சாதனங்கள் போன்ற பலவற்றை சிறந்த தள்ளுபடி விற்பனைகளில் விற்கின்றன.  இந்த தீபாவளி சமயத்தில் பல்வேறு ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் அற்புதமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளைக் கொண்டு வந்துள்ளன, அதை பற்றி இங்கே காண்போம். 

பிளிப்கார்ட் (Flipkart) :

பிளிப்கார்ட் அதன் ப்ளஸ் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அக்டோபர் 10ம் தேதி நள்ளிரவு முதல் பண்டிகை கால விற்பனையை தொடங்கியுள்ளது.  பிளஸ் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு விற்பனை அக்டோபர் 11 முதல் அக்டோபர் 16 வரை நடைபெறவுள்ளது.  எஸ்பிஐ வங்கியின் கார்டுகளைப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்பவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடியும், ஆக்சிஸ் வங்கி கார்டு, பேடியும் வாலட் மற்றும் யூபிஐ மூலம் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 10 சதவீத உடனடி கேஷ்பேக்கும் வழங்கப்படுகிறது.  மானிட்டர்கள், பிரிண்டர்கள், கேமராக்கள் போன்றவற்றிற்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி மற்றும் கணினி மற்றும் எலெக்ட்ரானிக் சம்மந்தமான பொருட்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. 

மேலும் படிக்க | கிரெடிட் கார்டு Bill-ஐ Google Pay மூலம் செலுத்தலாம்; ஈஸியான வழிமுறை 

அமேசான் (Amazon) :

அமேசான் நிறுவனம் 'எக்ஸ்ட்ரா ஹேப்பினஸ் டேஸ்' சலுகைகளை அறிவித்துள்ளது, அக்டோபர் 8 ஆம் தேதி முதல் இந்த சலுகைகள் தொடங்கியுள்ளது,  இதில் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், டிவிகள், உடல்நலம் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள், குழந்தை தயாரிப்புகள் மற்றும் பலவற்றில் விற்பனையாளர்களிடமிருந்து சிறப்பு சலுகைகள் மற்றும் சலுகைகளை வழங்குகிறது.  டெக்னோ, ஐகியூ மற்றும் சியோமி ஸ்மார்ட்போகளுக்கு சிறந்த தள்ளுபடி உண்டு.

நைகா (Nykaa) :

ஃபேஷன் பிராண்டான நைகா தீபாவளி விற்பனையை தொடங்கியுள்ளது, பல்வேறு அழகு சாதனப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது.  மேலும் ரூ 400 பிளாட் தள்ளுபடி மற்றும் ரூ 200 பிளாட் தள்ளுபடி போன்ற பல கூப்பன்களையும் வழங்குகிறது.

மிந்த்ரா (Myntra) :

ஆடைகள், அணிகலன்கள், அழகு மற்றும் கேஜெட்டுகள் போன்ற பொருட்களுக்கு மிந்த்ராவில் 50 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.  அலங்காரப் பொருட்களுக்கு 40 முதல் 70 சதவீதம் தள்ளுபடியும், பட்ஜெட் ஸ்டோர்களில் ரூ. 499க்கு கீழ், ஆக்டிவ்வேர் ரூ. 999க்குள், கிட்ஸ்வேர் 70 சதவீத தள்ளுபடியிலும் விற்பனை செய்யப்படுகிறது.

அஜியோ (Ajio) :

ஃபேஷன் மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு அஜியோ சிறந்த தள்ளுபடியை வழங்குகிறது, இதில் விதவிதமான அலங்கார பொருட்கள், ஸ்டைலான மேற்கத்திய மற்றும் இந்திய உடைகள், அணிகலன்கள் மற்றும் பிரீமியம் பிராண்டுகளுக்கு 50 முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | Investment Tips: இதில், இப்படி முதலீடு செய்தால் போதும், சில ஆண்டுகளில் நீங்கள் கோடீஸ்வரர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News