வங்கி தேர்வு எழுதும் இளைஞர்களே... இனி சிபில் ஸ்கோர் ரொம்ப முக்கியம் - அப்புறம் வேலை கிடைக்காது!

IBPS Announcement On Cibil Score: வங்கி தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கும், அதை எழுத நினைப்பவர்களுக்கும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் தற்போது புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பு குறித்தும், அதனால் யாருக்கு பாதிப்பு என்பது குறித்தும் இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jul 8, 2023, 11:45 PM IST
  • தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் கடன் வரலாறு குறித்த விதிகளில் மாற்றம்.
  • இனி சிபில் ஸ்கோர் 650க்கு மேல் இருக்க வேண்டும்.
  • வங்கிக் கணக்கு இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு இதில் பிரச்னையில்லை.
வங்கி தேர்வு எழுதும் இளைஞர்களே... இனி சிபில் ஸ்கோர் ரொம்ப முக்கியம் - அப்புறம் வேலை கிடைக்காது! title=

பொதுத்துறை வங்கிகளில் (SBI தவிர்த்து) பணிகளுக்கு ஆட்சேர்ப்பில், பொது ஆட்சேர்ப்பு நிறுவனமான வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், வங்கித் துறையில் வேலை தேடும் விண்ணப்பதாரர்களுக்கு IBPS புதிய விதி ஒன்றை விதித்துள்ளது.

650க்கு மேல் சிபில் ஸ்கோர்

இந்த ஆண்டின் முதல் வங்கி எழுத்தர் ஆட்சேர்ப்பு அறிவிப்பில், விண்ணப்பதாரர்கள் ஆரோக்கியமான கடன் வரலாற்றைப் பராமரிக்க வேண்டும் மற்றும் வேலைக்கு விண்ணப்பிக்கும் முன் குறைந்தபட்ச சிபில் மதிப்பெண் 650 ஆக இருக்க வேண்டும் என்றும் IBPS தெரிவித்துள்ளது.

"வங்கி எழுத்தர் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் நபர், ஆரோக்கியமான கடன் வரலாற்றைப் பராமரிப்பதை உறுதிசெய்ய வேண்டும். அவர் பங்கேற்கும் வங்கிகளில் சேரும் போது குறைந்தபட்ச சிபில் ஸ்கோர் 650 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்" என்று IBPS வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனால் என்ன பாதிப்பு?

வங்கிக் கணக்கு இல்லாத விண்ணப்பதாரர்கள் தங்கள் சிபில் ஸ்கோரின் நிலையை சமர்ப்பிக்கத் தேவையில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பணியில் சேரும் தேதிக்கு முன் சிபில் ஸ்கோரை புதுப்பிக்காத விண்ணப்பதாரர்கள் தங்கள் நிலையைப் புதுப்பிக்க வேண்டும் அல்லது எதிர்மறையாகப் பிரதிபலிக்கும் கணக்குகள் தொடர்பாக நிலுவையில் இல்லை என்று கடனளிப்பவரிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழை (No Objection Certificate) சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது. 

சிபில் ஸ்கோர் வரம்பை பின்பற்ற தவறினால் வேலைக்கு வழங்கப்பட்ட கடிதம் (Offer Letter) திரும்பப் பெறப்படலாம் அல்லது தகுதி அளவுகோலின்படி அது ரத்து செய்யப்படலாம். ஏனென்றால், சில மாணவர்கள் வங்கிகளில் வாங்கிய கல்வி கடன்களை முறையாக திருப்பி செலுத்தாமால் வங்கி தேர்வுக்கு தயாராகி வருவார்கள். அவர்களின் சிபில் ஸ்கோர் குறைந்திருந்தால், அவர்கள் கையில் ஆப்பர் லெட்டர் கிடைத்தும் கடைசியில் பணியை தவறவிடும் வாய்ப்பும் ஏற்படும். எனவே, தற்போது வங்கி தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் தங்கள் கடன் வரலாறு குறித்து சிந்தித்து செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. 

மேலும் படிக்க | வட்டியை வாரி இறைக்கும் இந்த வங்கிகள்... FD திட்டத்தை விட சேமிப்பு கணக்கில் லாபத்தை அள்ளலாம்!

சிபில் ஸ்கோர் என்றால் என்ன?

சிபில் அறிக்கை என்பது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து நீங்கள் வாங்கிய கடன்களின் விவரங்களைக் கொண்ட நிதி அறிக்கையாகும். தனிநபர் கிரெடிட் ஸ்கோர் என்பது ஒரு நபர் அல்லது நிறுவனம் அவர்களின் கடன் வரலாறு மற்றும் தற்போதைய நிதிச் சூழ்நிலைகளின் பகுப்பாய்வு அடிப்படையில் அவர்களின் நிதிக் கடமைகளை நிறைவேற்றும் திறனைக் குறிக்கும் ஒரு எண் அடிப்படையிலான மதிப்பீடாகும்.

CRIF ஹைமார்க், ஈக்விஃபாக்ஸ், எக்ஸ்பீரியன் ஆகியவற்றுடன் சிபில் ஆகியவை இந்தியாவில் கடன் மதிப்பெண்களைக் கணக்கிடும் நான்கு கிரெடிட் பீரோக்கள் ஆகும். சிபில் ஸ்கோர் என்பது 300 முதல் 900 வரையிலான மூன்று இலக்க எண்ணாகும். இது உங்கள் கடன் தகுதியைக் குறிக்கிறது. சிபில் அறிக்கையில் காணப்படும் கடன் வரலாற்றைப் பயன்படுத்தி சிபில் மதிப்பெண் பெறப்படுகிறது.

கிரெடிட் சுயவிவரத்தில் வீட்டுக் கடன்கள், கிரெடிட் கார்டுகள், தனிநபர் கடன்கள், ஆட்டோமொபைல் கடன்கள், ஓவர் டிராஃப்ட் வசதிகள் மற்றும் ஒருவர் பெற்ற பிற கடன்கள் மற்றும் அவற்றின் கட்டண வரலாறு ஆகியவை அடங்கும்.

பெரிய ஆர்சேர்ப்பு இதுதான்

IBPS அறிவிப்பின்படி, இந்த ஆண்டு அதிகாரிகள் மற்றும் எழுத்தர் பதவிகளுக்கான முதல் பெரிய ஆட்சேர்ப்பு இதுவாகும். வரும் மாதங்களில் மேலும் பல காலியிடங்கள் சார்ந்த அறிவிப்புகள் வர வாய்ப்புள்ளது. 4,045 எழுத்தர் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை நடைபெற்று வருகிறது. 

மேலும் படிக்க | டிஜிட்டல் பரிவர்த்தனை... இந்த ‘சிறு’ தவறுகளால் பணத்தை பறிகொடுக்காதீர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News