அட்சய திருதியை 2022: தரமான தங்கம் - போலி தங்கம் கண்டுபிடிக்கும் முறை

இந்தியர்களுக்கு  அதுவும் தென்னிந்தியர்களுக்கு தங்கம் என்பது அவர்களாக வாழ்வோடு பின்னி பிணைந்ததாக இருக்கிறது.  தங்கம்  மிகவும் விரும்பத்தக்க ஒரு பொருளாக மட்டுமின்றி, கௌரவமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 3, 2022, 09:25 AM IST
அட்சய திருதியை 2022:  தரமான தங்கம் - போலி தங்கம் கண்டுபிடிக்கும் முறை title=

இந்தியர்களுக்கு  அதுவும் தென்னிந்தியர்களுக்கு தங்கம் என்பது அவர்களாக வாழ்வோடு பின்னி பிணைந்ததாக இருக்கிறது.  தங்கம்  மிகவும் விரும்பத்தக்க ஒரு பொருளாக மட்டுமின்றி, கௌரவமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. 

இன்று (மே 3 ஆம் தேதி) அட்சய திருதியை. இந்த நாளில் தங்கம் வாங்குவதை மக்கள் மிகவும் மங்களகரமானதாக கருதுகின்றனர். அட்சய திருதியைக்கு ஒரு நாள் முன்பு தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால், இல்லதரசிகளுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 

தங்கம் மிகச் சிறந்த முதலீட்டுப் பொருளாகும். அப்பப்பட்ட விலை உயர்ந்த  தங்கம் வாங்கும் போது அது சுத்தமான தங்கமா, இல்லையா என்ற சந்தேகம் நிறையப் பேருக்கு ஏற்படுகிறது. நாம் வாங்கும் தங்கத்தில் சிறிய அளவில் கலப்படம் செய்தாலே நமக்கு பல ஆயிரங்கள் நஷ்டம் ஏற்படும். யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தங்கத்துடன் செம்பு, துத்தநாகம், வெள்ளி போன்றவை கலக்கப்படுகிறது.  இந்நிலையில் தரமான தங்கமா அல்லது போலியான தங்கமா என பிரித்து அறிந்து கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம். 

அமில சோதனை

உண்மையான தங்கத்தைப் பற்றி நீங்களே தெரிந்துகொள்ள விரும்பினால், இந்த அமிலச் சோதனை மூலம் எளிதாகக் கண்டறியலாம். இதைச் செய்ய, நீங்கள் ஒரு முள் கொண்டு நகை மீது ஒரு சிறிய கீறலைப் போடுங்கள், பின்னர் அந்த கீறலின் மீது நைட்ரிக் அமிலத்தின் ஒரு துளியை வைக்கவும். போலி தங்கம் உடனடியாக பச்சை நிறமாக மாறும், அதே நேரத்தில் உண்மையான தங்கம் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.

வினிகர் சோதனை

நீங்கள் வினிகரின் உதவியுடன் தங்கத்தை அடையாளம் காணலாம். தங்க நகைகளில் சில துளி வினிகரை வைத்து, அதன் நிறத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றால், அது உண்மையான தங்கமாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், அதன் நிறம் மாறினால் அது போலியானது.

மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்களுக்கு அட்சய திரிதியை மிகவும் உகந்தது

காந்த சோதனை

இதற்கு ஹார்டுவேர் கடையில் இருந்து  வாங்கிய காந்த துண்டை எடுத்து தங்க நகைகளில் மீது தேய்க்கவும். அது ஒட்டிக்கொண்டால் உங்கள் தங்கம் உண்மையானது அல்ல, அது ஒட்டவில்லை என்றால் அது உண்மையானது. ஏனெனில் தங்கம் ஒரு காந்தட்த்ஹை ஈர்க்கும் உலோகம் அல்ல. 

ரசாயனங்கள் மற்றும் அமிலங்கள்

இதேபோல், சில ரசாயனங்கள் மற்றும் அமிலங்களைப் பயன்படுத்தி தங்கத்தின் தரத்தை சோதிக்க முடியும். இந்த ரசாயனங்கள் தங்கத்தின் மீது பட்டால், அவை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, ஆனால் அவை அசுத்தமான தங்கம் மீது பட்டால் எதிர்வினையாற்றுகின்றன.

ஹால்மார்க்

ஹால்மார்க் மூலம் உண்மையான தங்கத்தை அடையாளம் காண்பது எளிதானது. இந்தியாவில், வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படும் நகைகளின் தர அளவை BIS அமைப்பு சரிபார்க்கிறது. எனவே பிஐஎஸ் ஹால்மார்க் உள்ளதா என சரிபார்ப்பது அவசியம். அதோடு, ஹால்மார்க் ஒரிஜினலா இல்லையா என்பதையும் பார்க்க வேண்டும். அசல் ஹால்மார்க் இந்திய தரநிலைகளின் பணியகத்தின் முக்கோண முத்திரையைக் கொண்டுள்ளது. அதில் தங்கத்தின் தூய்மையும் ஹால்மார்க்கிங் மையத்தின் லோகோவுடன் எழுதப்பட்டிருக்கும்.

தண்ணீர் சோதனை

மற்றொரு எளிதான வழி தண்ணீரைச் சோதிப்பது. இதற்காக, ஒரு ஆழமான பாத்திரத்தில் 2 கிளாஸ் தண்ணீரை வைத்து, இந்த தண்ணீரில் தங்க நகைகளை வைக்கவும். உங்கள் தங்கம் மிதந்தால் அது உண்மையல்ல. அதே நேரத்தில், உங்கள் நகைகள் மூழ்கினால், அது உண்மையான தங்கம்.

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2022: செல்வ செழிப்பில் மிதக்க போகும் 6 ராசிக்காரர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News