Fixed Deposit-ல் டெபாசிட் செய்யணுமா? இந்த வங்கியில் கிடைக்கும் அசத்தும் விகிதங்கள்

Airtel Payments Bank FD : ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எஃப்டி வசதியைத் தொடங்கியுள்ளது. இதற்காக ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி இண்டஸ்இண்ட் வங்கியுடன் இணைந்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 27, 2022, 12:27 PM IST
  • வாடிக்கையாளர்களுக்கு எஃப்டி வசதியைத் தொடங்கியுள்ளது ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி.
  • இண்டஸ்இண்ட் வங்கியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
  • மூத்த குடிமக்களுக்கு 7 சதவீத வட்டி வழங்கப்படும்.
Fixed Deposit-ல் டெபாசிட் செய்யணுமா? இந்த வங்கியில் கிடைக்கும் அசத்தும் விகிதங்கள் title=

ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் எஃப்டி: நிலையான வைப்புகள் அந்த காலம் தொட்டு சேமிப்பிற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான முறையாக கருதப்படுகின்றன. எனினும், காலப்போகில் பலவித சேமிப்பு முறைகள் வந்துவிட்டன. மக்கள் அவற்றிலும் தங்கள் பணத்தை டெபாசிட் செய்து வருகின்றனர். 

எனினும், இன்றும் நிலையான வைப்பு முறையே பலரது விருப்பமான சேமிப்பு வகையாக இருந்து வருகிறது. உங்களுக்கு எஃப்டி போடும் பழக்கம் இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ள செய்தியாக இருக்கும். 

இண்டஸ்இண்ட் வங்கியுடன் ஒப்பந்தம்

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எஃப்டி வசதியைத் தொடங்கியுள்ளது. இதற்காக ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி இண்டஸ்இண்ட் வங்கியுடன் இணைந்துள்ளது. இதன் கீழ், வங்கி எஃப்டி-க்கு 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வட்டி அளிக்கும். தற்போது, ​​மற்ற அரசு மற்றும் தனியார் வங்கிகள் எஃப்டி-க்கு அதிகபட்சமாக 6 சதவீதம் வரை வட்டி தருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

மெச்யூரிட்டுக்கு முன்னர் தொகையை எடுத்தால் அபராதம் இல்லை
வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்காகவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ எஃப்டி தொகையை மெச்யூரிட்டுக்கு முன்பே எடுத்தாலும், வங்கி எந்த அபராதத்தையும் விதிக்காது. வங்கி அளித்துள்ள தகவலில், எஃப்டி வசதி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி டிஜிட்டல் பேங்கிங் போர்ட்ஃபோலியோவை வலுப்படுத்தியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அடுத்த 5 மாதங்களுக்கு இலவச ரேஷன் வேண்டுமானால் இத பண்ணுங்க 

மூத்த குடிமக்களுக்கு 7 சதவீத வட்டி வழங்கப்படும்

ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ. 500 முதல் ரூ. 1,90,000 வரை டெபாசிட் செய்யலாம். இதற்கு ஆண்டுதோறும் 6.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கு அனைத்து வகையான நிரந்தர வைப்புகளுக்கும் 0.5 சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கும்.

ஏர்டெல் தேங்க்ஸ் செயலி மூலம் வாடிக்கையாளர்கள் எஃப்டி-யின் காலம் முடிவதற்கு முன்னரும் அதை நிறைவு செய்துகொள்ளலாம்’ என்று வங்கி தெரிவித்துள்ளது. அப்படி செய்தால், அவர்களிடமிருந்து அபராதம் அல்லது செயலாக்கக் கட்டணம் வசூலிக்கப்படாது. இந்த எஃப்டி வசதி ஒன்று, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு கிடைக்கும் என்று இண்டஸ்இண்ட் வங்கி தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் பல எஃப்டி-களையும் போடலாம்.

மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் செய்தி: 3 கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படலாம், ஊதியத்தில் ஏற்றம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News