ரசிகர்களை குழப்பும் நடிகை திரிஷாவின் டிவிட்டர் பதிவு!

நடிகை திரிஷா, தன்னுடைய டிவிட்டரில் வெளியிட்ட பதிவால் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

Last Updated : Jul 5, 2018, 02:30 PM IST
ரசிகர்களை குழப்பும் நடிகை திரிஷாவின் டிவிட்டர் பதிவு! title=

நடிகை திரிஷா, தன்னுடைய டிவிட்டரில் வெளியிட்ட பதிவால் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை திரிஷா. இவர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். 

தற்போது இவர் ‘மோகினி’, ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘1818’, ‘96’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.  இந்த படங்களில் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

இந்நிலையில், தற்போது இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘A table for two ❤️❤️’ என்று பதிவு செய்திருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள், திரிஷா காதல் வலையில் விழுந்து இருப்பதாக பதிவு செய்து வருகிறார்கள். 

 

 

 

திரிஷா இதற்கு முன் தயாரிப்பாளர் வருண் மணியன் என்பவரை காதலித்து, திருமணம் வரை சென்று நின்று போனது என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News