இந்தியாவில் ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணமாக உள்ளது. ஒரு கட்டாய ஆவணமாகவும் ஒரு அடையாள அட்டையாகவும் இருப்பதுடன் ஆதார் அட்டை நாட்டில் உள்ள அனைவருக்கும் அவசியமானதாகவும் ஆகிவிட்டது,
அரசாங்கத்தின் அனைத்து சேவைகளையும், அரசு அளிக்கும் வசதிகளையும் பெற, ஆதார் (Aadhaar) அட்டையை வைத்திருப்பது அவசியமாகும். இருப்பினும், உங்கள் ஆதார் அட்டையில் ஒரு தவறு இருந்தால் கூட, நீங்கள், குறிப்பிட்ட வங்கிகள், முதலீட்டுத் திட்டங்கள், அரசாங்க ஆதரவு திட்டங்கள் போன்றவற்றின் பலன்கள் ஆகியவற்றை பெற முடியாமல் போகலாம். ஆகையால், உங்கள் ஆதார் அட்டையைப் புதுப்பிப்பது அவசியமாகும்.
இப்போது, உங்கள் ஆதார் அட்டையை ஆன்லைனிலும் எளிதாக புதுப்பிக்கலாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இணையதளத்திலும் அதன் செயலிகளிலும் இதற்கான பல வசதிகளை வழங்கியுள்ளது. அவற்றின் மூலம் நாம் எளிதாக இந்த மாற்றங்களைச் செய்ய முடியும்.
ALSO READ: Aadhaar Card: முகவரியை மாற்றுவது மிகவும் எளிது; ஆவணம் எதுவும் தேவையில்லை
ஆனால் இவற்றை அணுக முடியாதவர்களுக்கு இந்த பணிகளை எளிதாக்க, யுஐடிஏஐ இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் (IPPB) கூட்டு சேர்ந்து சில வசதிகளை செய்து கொடுக்கிறது. இதன் மூலம் ஆதார் அட்டையில் மாற்றங்களை செய்ய விரும்புபவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே இந்த மாற்றங்களை செய்யலாம்.
சமீபத்தில், தகவல்தொடர்பு அமைச்சகம் இந்த தகவலை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டது, "ஆதார் அட்டையில், மொபைல் எண்ணைப் புதுப்பிப்பதன் மூலம், பயனாளர், அரசாங்கத்தின் பொது நலத் திட்டங்களான பிடிஎஸ்/டிபிடி திட்டங்களுக்குப் பதிவு செய்தல், ஒரே நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் ரேஷன் பெறுதல், புதிய மொபைல் சிம் இணைப்புகளுக்கு KYC, ஆன்லைனில் மக்கள்தொகை விவரங்களைப் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமத்திற்கான RTO சேவைகளை அணுகுதல், வருமான வரி வருமானத்தை சரிபார்த்தல் மற்றும் EPFO சேவைகள் பற்றிய தகவல் பெறுதல் போன்ற பல்வேறு சேவைகளை பெற முடியும்" என்று இதில் கூறப்பட்டுள்ளது.
தபால்காரர் ஒருவரை தங்கள் வீட்டிற்கு வர கோரிக்கை விடுத்து பயனாளர் இப்போது தங்கள் மொபைல் எண்களை ஆதார் அட்டையில் (Aadhaar Card) புதுப்பிக்க முடியும். நாடு முழுவதும் உள்ள இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் 650 கிளைகளில் இருந்து வாடிக்கையாளர்கள் இந்த சேவைகளை அணுக முடியும். அதை எளிதாக்கும் பொருட்டு, IPPB 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தபால்காரர்கள் மற்றும் கிராமின் டாக் சேவக் பணியாளர்களை நியமித்துள்ளது. இவர்கள் பயனாளர்களின் வீட்டிற்கே வந்து ஆதார் தகவல்களைப் புதுப்பிக்கும் பணியை மேற்கொள்வார்கள்.
ALSO READ: Aadhaar: ஒரு நபர் இறந்த பிறகு அவரது ஆதார் எண் ரத்தாகுமா; அரசு கூறுவது என்ன..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR