18 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்குவது நடைமுறையில் இல்லை என்று அரசு தெளிவாகக் கூறியுள்ளது. கொரோனா தொற்றுநோய்களின்போது, மத்திய ஊழியர்கள் பெற்ற அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (டிஆர்) ஆகியவற்றை நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக ராஜ்யசபாவில் சமீபத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி வழங்குவது குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட நிலுவைத் தொகை கொடுப்பதற்கு சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission: அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அப்டேட், எப்போது அறிவிப்பு?
மத்திய அமைச்சர் விளக்கம்
கொரோனா காலத்தில் நிலுவை வைக்கப்பட்ட 18 மாதங்களுக்கான டிஏ மற்றும் டிஆர் விடுவிப்பு தொடர்பாக பல்வேறு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களிடமிருந்து அரசுக்கு பல விண்ணப்பங்கள் வந்துள்ளது. ஆனால், தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஜனவரி 1, 2020 முதல் ஜனவரி 1, 2021 வரை செலுத்த வேண்டிய 3 தவணை DA மற்றும் DR-ஐ மத்திய அரசு நிறுத்தியுள்ளது. அது கொடுக்கப்படாது என நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி விளக்கமளித்துள்ளார்.
பரிசுகளை வழங்கிய மோடி அரசு
அதேநேரத்தில் தீபாவளிக்கு முன்பு மத்தியில் இருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்டை அறிவித்தது. அந்த ஜாக்பாட் என்னவென்றால், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதமாக உயர்த்தியது. ஏற்கனவே 34 சதவீதம் டிஏ கொடுக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது 38 சதவீதமாக கொடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | 7th pay commission முக்கிய செய்தி: டிஏ கணக்கீட்டில் மாற்றம், இனி இதற்கும் வரி உண்டு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ