7th Pay Commission: LTC cash voucher திட்டம் பற்றிய முக்கிய தகவலை வழங்கியது மத்திய அரசு

LTC திட்டத்தைப் பெறுவதற்கு ஏதேனும் முன் அறிவிப்பு தேவையா என சமீபத்தில், பல அமைச்சகங்கள் மற்றும் துறைகள் கேள்விகளை எழுப்பி இது தொடர்பான விளக்கங்களை அரசாங்கத்திடம் கேட்டுள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 27, 2021, 08:55 PM IST
  • LTC பண வவுச்சர் திட்டம் தொடர்பாக அரசு ஊழியர்களுக்கு பல குழப்பங்கள் உள்ளன.
  • குழப்பத்தை நீக்க மத்திய அரசு இறுதியாக ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
  • LTC திட்டத்தின் விஷயத்தில் எந்த வித முன் அறிவிப்பும் தேவையில்லை.
7th Pay Commission: LTC cash voucher திட்டம் பற்றிய முக்கிய தகவலை வழங்கியது மத்திய அரசு title=

7th Pay Commission Latest News Today: LTC பண வவுச்சர் திட்டத்தின் நன்மைகளைப் பெறுவது தொடர்பாக பல அரசு ஊழியர்களுக்கு பல கேள்விகள் உள்ள நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்த குழப்பத்தை நீக்க மத்திய அரசு இறுதியாக ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது. LTC திட்டத்தைப் பெறுவதற்கு ஏதேனும் முன் அறிவிப்பு தேவையா என சமீபத்தில், பல அமைச்சகங்கள் மற்றும் துறைகள் கேள்விகளை எழுப்பி இது தொடர்பான விளக்கங்களை அரசாங்கத்திடம் கேட்டுள்ளன.

அரசாங்கம் தெளிவுபடுத்தியது:

பிப்ரவரி 16 தேதியிட்ட அறிக்கையில், 2018-21க்கு இடையில் எல்.டி.சி நிலுவையில் இருக்கும் LTC-க்கு பதிலாக இந்த சிறப்பு ரொக்கத் தொகைக்கான அறிவிப்பு செய்யப்பட்டது என்று அரசு கூறியது. இந்த திட்டத்தின் பயனைப் பெறுவதற்கு பில்கள் 2021 மார்ச் 3 ஆம் தேதிக்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. LTC திட்டத்தின் விஷயத்தில் எந்த வித முன் அறிவிப்பும் தேவையில்லை என்றும், 2018-19ஆம் ஆண்டுக்கு (31.12.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது), 2021 மார்ச் 31 க்கு முன் தொகையை கோரலாம் என்றும் மத்திய அரசு மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த திட்டம் 2018-21 கால அளவிற்கான LTC பிளாக் திட்டமாக இருப்பதால், இதற்கு முன்னர், மத்திய அரசு இதற்கான செயல்பாட்டு முறைகளையும் தெளிவுபடுத்தியது. பொதுவாக, ஒரு LTC பிளாக்கில் இரண்டு எல்.டி.சி கட்டணங்கள் அடங்கும் (ஒன்று சொந்த ஊர், மற்றொன்று இந்தியாவில் எங்கும் செல்ல).  அரசாங்கத்தின் புதுப்பிப்புகளின்படி, இவற்றில் ஒன்றை எடுத்து மற்றொன்று எடுக்கப்படாமல் இருந்தால், இந்த திட்டத்தை இதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அக்டோபர் 12, 2020 முதல் அமல்படுத்தப்படும் எல்.டி.சி பண வவுச்சர் திட்ட ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பிளாக் ஆண்டில் பயன்படுத்தப்படாத எல்.டி.சி கட்டணத்திற்கு எல்.டி.சி திட்டம் பொருந்தும் என்று அரசாங்கம் கூறியது.

ALSO READ: 7th Pay Commission, பயனுள்ள அண்மைத் தகவல்கள்; வீட்டு வாடகை, ஊதியம்

இத்திட்டத்தைப் பெறும்போது, ​​பல பில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அக்டோபர் 12, 2020 தேதியிட்ட எல்.டி.சி பண வவுச்சர் திட்ட ஆணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து, நடப்பு நிதியாண்டின் இறுதி வரை வாங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஊழியர்கள் (Central Government Employees) செய்யும் கொள்முதலில் 12% ஜிஎஸ்டி-யும் இருக்கும் என்றும் கட்டணம் டிஜிட்டல் முறையில் செலுத்தப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் கூறியது. இருப்பினும், ஜிஎஸ்டி விவரங்களுடன் இன்வாய்ஸ் அளிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டு பணம் திரும்ப அளிக்கப்படும்.

முடிந்தவரை, கடைசி நிமிட அவசரத்தையும் அதன் விளைவாக ஏற்படும் தொல்லைகளையும் தவிர்க்க 2021 மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்னர் கிளெய்ம் கோரப்பட வேண்டும் என ஊழியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

ALSO READ: 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு jackpot, LTC Cash Voucher-ல் இனி No Tax!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News