5 Bitter Truth In Life : நம் அனைவருக்குமே, வாழ்க்கை சிம்பிளாகவும் மென்மையாகவும் செல்ல வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால், ரியாலிட்டி பல சமயங்களில் அப்படி இருப்பதில்லை. நாம் எதிர்பார்க்காத பல விஷயங்கள் நடக்கும். அதற்கு ஏற்றவாறு நாம் நம்மை பழக்கிக்கொள்ள வேண்டும். அவற்றை ஏற்றுக்கொள்ள நம் மனம் பாகிக்கொண்டாலே போதும், வாழ்வில் வெற்றி பெறலாம். அப்படிப்பட்ட சில உண்மைகள் என்ன தெரியுமா?
எப்போதும் சொகுசாக இருக்க முடியாது:
நம்மில் பலர், “வாழ்க்கை அதன் போக்கில் போகட்டும்” என்று விட்டுவிடுவோம். அப்படி விடுவது, நம்மை ஒரு வித சொகுசான வாழ்க்கையிலேயே வைத்துக்கொள்ளும். இதனால் நமக்கு என்ன தேவையோ அதை நாம் செய்து கொள்ளாமலேயே பெரும்பாலான சமயங்களில் போய் விடுவோம். எனவே, பெரிய இலக்குகளை வைக்க வேண்டியதும், சொகுசான வாழ்க்கையை துரக்க தயாராக இருப்பதும் அவசியம் ஆகும். இதை கடந்து நம் கணவுகளை நோக்கி ஓட ஆரம்பித்து விட்டால், கண்டிப்பாக வெற்றி நம் கைக்கு வரும்.
நம்மை காப்பாற்ற யாரும் வரப்போவதில்லை:
இந்த உலகம், உங்களுக்கு நீங்கள் கேட்பதையெல்லாம் கொடுத்து விடாது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு எதாவது வேண்டுமென்றால், அதை நீங்கள்தான் எதுரத்தி எடுத்துக்கொள்ள வேண்டும். அதிர்ஷ்டத்திற்காகவும், பிறர் வந்து இதனை நடத்திக்கொடுப்பார் என்றும் காத்திருக்க கூடாது. வெற்றி வேண்டுமென்றால், அதற்கான முயற்சியை மேற்கொண்டுதான் ஆக வேண்டும். இலக்குகளை அடைவது உங்கள் பொறுப்பு, எனவே அதை நடத்திக்காட்ட வேண்டும்.
தெரியாததில்தான் வெற்றி ஒளிந்திருக்கிறது:
நமக்கு தெரிந்த அல்லது எளிதான விஷயங்களை செய்து கொண்டு, அதிலேயே இருந்து விடுவது நன்றாகத்தான் இருக்கும். ஆனால், நமக்கு தெரியாத ஒரு விஷயத்தை செய்ய ஆரம்பித்தால்தான் வெற்றி கிட்டும். நம்ம்மை எந்த விஷயம் பயம் கொடுக்கிறதோ, அதை செய்து அதில் வெற்றி பெற வேண்டும். பயத்தால் எதையும் செய்யாமல் இருந்து விடக்கூடாது.
தினசரி பழக்கங்கள் விதியையே மாற்றியமைக்கும்:
நாம் தினசரி செய்யும் விஷயங்கள், நம் வாழ்வையே மாற்றியமைப்பவையாக இருக்கும். காலையில் உடற்பயிற்சி செய்வதோ அல்லது உங்கள் கனவுகளை மெய்பட வைக்க எடுக்கும் முயற்சிகள் என அனைத்தும் இதில் அடங்கும். இந்த சிறிய பழக்கங்கள்தான் உங்கள் விதியையே மாற்றி எழுதுபவை ஆகும்.
தோல்வி என்பதும் வளர்ச்சியே:
பலர், தோல்வியை பார்த்து பயந்தே எந்த வேலையையும் செய்யாமல் இருந்து விடுகின்றனர். ஆனால், இது வளர்ச்சிக்கான ஒரு வழி என்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. தோல்விகளோ, தவறுகளோ நீங்கள் அந்த வேலையை செய்ய அருகதை இல்லாதவர் என்பதை காண்பிக்காது. நீங்கள் உங்கள் வாழ்வில் என்னென்ன மாதிரியான விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை இது நியாபக்கப்படுத்தும். அது மட்டுமன்றி, ஒரு விஷயத்தில் வெற்றி கிட்டுவதற்கு முன்னர் தோல்வியே கிட்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | நெகடிவ் எண்ணங்களை விசிறியடிக்க உதவும் 7 பழக்கங்கள்! ரொம்ப சிம்பிள்தான்..
மேலும் படிக்க | மன உறுதியை பன்மடங்காக உயர்த்தும் 7 புத்தகங்கள்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ