ஐபிஎல் 2018 22_வது லீக்: டெல்லியை கடைசி பந்தில் வீழ்த்திய பஞ்சாப்!!

ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் நேற்று இரவு நடந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை கடைசி பந்தில் டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Last Updated : Apr 24, 2018, 06:58 AM IST
ஐபிஎல் 2018 22_வது லீக்: டெல்லியை கடைசி பந்தில் வீழ்த்திய பஞ்சாப்!! title=

ஐ.பி.எல் தொடர் 11_வது சீசனின், 22_வது லீக் போட்டியில் டெல்லி அணியும், பஞ்சாப் அணியும் மோதின.

முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் கம்பீர் பந்து வீச்சை தேர்வு செய்தார்

இதைதொடர்ந்து, களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் குவித்தது. 

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், ஆரோன் பிஞ்ச் களமிறங்கினர். பிஞ்ச் 2 ரன் மட்டுமே எடுத்து ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஷ்ரேயாஸ் வசம் பிடிபட்டார்.

இதனையடுத்து, 20 ஓவரில் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. 

ஆனால், கடைசி பந்தில் எஸ்.எஸ்.ஐயர் ''அவுட்'' ஆனதால், டெல்லி அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்களை இழந்து 139 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர் அங்கிட் ராஜ்புட் ஆட்டநாயகன் விருதினை வென்றார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 10 புள்ளிகளூடன் முதலிடத்தில் உள்ளது.

Trending News