ஏப்ரல் 13-ம் தேதி(நேற்று) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டி பெங்களூரில் உள்ள சின்னசுவாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்நிலையில், முதலில் களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான லோகேஷ் ராகுல் மற்றும் மயங் அகர்வால் நிதானமாக ஆடினார்கள். ஆனால் அணியின் ஸ்கோர் 32 இருக்கும் போது பஞ்சாப் அணியின் முதல் விக்கெட் (மயங் அகர்வால்) கேட்ச் அவுட் ஆனர். அடுத்தட வந்த ஆரோன் பின்ச்(௦) வந்த வேகத்திலேயே திரும்பி சென்றார். 32 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறிய பஞ்சாப் அணியில் அடுத்து களம் இறங்கினார் அதிரடி வீரர் யுவராஜ் சிங்(4), இவர் ஒரு பவுண்டரி மட்டும் அடித்து விட்டு ஃபோல்ட் ஆனார். மறுமுனையில் லோகேஷ் ராகுல் நிதானமாக விளையாடி 47 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் 33 ரன்கள் எடுத்தார்.
பெங்களுரு அணியின் அபாரா பந்து வீச்சில் 19.2 ஓவரில் 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது பஞ்சாப் அணி. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியின் பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்களை வீழ்த்தினார்.
156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து களம் இறங்கிய பெங்களுரு அணி ஒரு ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. பிரெண்டன் மெக்கலம் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். சீரான இடைவெளியில் நிதானமாகவும், அதிரடியாகவும் விளையாடிய பெங்களுரு அணி 19.3 ஓவரில் ஆறு விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த அணியில் அதிகபட்ச ஸ்கோர் ஏபி டி வில்லியர்ஸ் 57 ரன்கள் எடுத்தார்.
Finished with a BANG!
Washi and Woakes follow up their bowling efforts by staying till the end and giving us our first win! #RCB win by 4 wickets #PlayBold #RCBvKXIP— Royal Challengers (@RCBTweets) April 13, 2018
இந்த ஐபிஎல் சீசனில் பெங்களுரு அணி தனது முதல் வெற்றியை ருசித்துள்ளது. அதேவேளையில் பஞ்சாப் அணியின் முதல் தோல்வி ஆகும்.