ஐபிஎல் 2018: 102 ரன்கள் வித்தியாசத்தில் அபரா வெற்றி பெற்ற மும்பை

நேற்றைய போட்டியில் 102 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி படு தோல்வி

Written by - Shiva Murugesan | Last Updated : May 10, 2018, 06:22 AM IST
ஐபிஎல் 2018: 102 ரன்கள் வித்தியாசத்தில் அபரா வெற்றி பெற்ற மும்பை title=

தற்போது ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11-வது சீசன் நடந்து வருகிறது. நேற்று இரவு 8 மணியளவில் நடைபெற்ற 41_வது லீக் ஆட்டத்தில் மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து, களம் இறங்கிய மும்பை அணி தொடக்க முதலே அதிரடியாக விளையாடியது. இஷான் கிஷன் நேர்த்தியான ஆட்டத்தால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழபுக்கு 210 ரன்கள் எடுத்தது.

 

 

பின்னர் 211  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்கை களமிறங்கியது கொல்கத்தா அணி. 4 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்த கொல்கத்தா அணியில், அடுத்தடுத்து விக்கெட் விழுந்ததால் 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 102 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபரா வெற்றி பெற்றது. ஆட்டநாயகான இஷான் கிஷன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

 

இந்த ஐபிஎல் தொடரில் ஐந்தாவது வெற்றியை பெற்றுள்ளது மும்பை அணி. இதன்மூலம் புள்ளி பட்டியலில் அந்த அணி 4_வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அதேவேளையில் ஐந்து வெற்றிகளை பெற்று 10 புள்ளிகளை பெற்று கொல்கத்தா அணி 5_வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இன்று இரவு 8 மணிக்கு தில்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் 41 லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் மோத உள்ளன.

 

 

Trending News