Love Jihad: மத மாற்ற தடை சட்டம் கொண்டு வருகிறது யோகி அரசு..!!!

லவ் ஜிஹாத்திற்கு (Love Jihad) எதிரான நடவடிக்கையில்,  யோகி அரசு உ.பி.யில் மத மாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 18, 2020, 06:49 PM IST
  • லவ் ஜிஹாத்திற்கு (Love Jihad) எதிரான நடவடிக்கையில், யோகி அரசு உ.பி.யில் மத மாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • கான்பூர் மற்றும் மீரட்டில் love jihad வழக்குகள் அதிகபட்சமாக பதிவாகியுள்ளன.
  • தற்போது, ​​எட்டு மாநிலங்களில் மத மாற்ற தடை சட்டங்கள் உள்ளன
Love Jihad:  மத மாற்ற தடை சட்டம் கொண்டு வருகிறது யோகி அரசு..!!! title=

இந்து மதத்தை சேர்ந்த பெண்களை கவர்ந்திழுக்க, முஸ்லீம் ஆண்கள் தங்கள் மத அடையாளத்தை மறைத்து கொண்டு பெண்களை ஏமாற்றும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உத்திர பிரதேச (Uttar Pradesh ) மாநிலத்தில் 'லவ் ஜிஹாத்' (Love Jihad) வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரபிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் (Yogi Adityanath) அரசாங்கம் விரைவில் மத மாற்றங்களுக்கு எதிரான சட்டம் ஒன்றை அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இந்து சிறுமிகளை கவர்ந்திழுக்க முஸ்லீம் ஆண்கள் தங்கள் மத அடையாளத்தை மறைத்து வைத்திருக்கும் மாநிலத்தில் ‘லவ் ஜிஹாத்’ வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு யோகி அரசு, இளம் பெண்களை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

கான்பூர் மற்றும் மீரட்டில் இருந்து இதுபோன்ற வழக்குகள் அதிகபட்சமாக பதிவாகியுள்ளன.

ஆர்.எஸ்.எஸ் (RSS) தலைவர் மோகன் பகவத், இந்த வாரம் தனது இரண்டு நாள் லக்னோ பயணத்தின் போது, ​​மத மாற்றம் தொடர்பான பிரச்சினையை எழுப்பினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு மாநிலங்களில் உள்ள மத மாற்ற தடை சட்டங்கள், எந்தவொரு நபரையும் நேரடியாகவோ அல்லது வேறுவிதமாகவோ ‘வலுக்கட்டாயமாக’ அல்லது ‘மோசடி’ வழிமுறைகள் மூலமாகவோ அல்லது ‘கவர்ச்சி’ அல்லது ‘தூண்டுதல்’ மூலமாகவோ மாற்றுவதைத் தடை செய்கின்றன.

"உத்தரபிரதேசத்தில் உள்ள சட்டம் இதே போலவே இருக்கும்.  மத மாற்றங்களுக்கான விதிகளை கடுமையாக ஆக்கப்படும்" என்று சட்டத்துறையின் அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் படிக்க | கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட Paytm.. அதில் உள்ள பணம் என்ன ஆகும்..!!!

தற்போது, ​​எட்டு மாநிலங்களில் மத மாற்ற தடை சட்டங்கள் உள்ளன - அருணாச்சல பிரதேசம், ஒடிசா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் மத மாற்று தடை சட்டங்கள் உள்ளன.

1967 ஆம் ஆண்டில் இந்தச் சட்டத்தை இயற்றிய முதல் மாநிலம் ஒடிசா, 1968 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசம் இந்த சட்டத்தை கொண்டு வந்தது.

"இந்த வரிசையில் உத்தரபிரதேசம் விரைவில் ஒன்பதாவது மாநிலமாக மாறக்கூடும்" என்று சட்டத் துறை அதிகாரி கூறினார்.

கான்பூரில் ‘லவ் ஜிஹாத்’ தொடர்பான 11 வழக்குகளை விசாரிக்க மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Sep 21 முதல் எங்கெல்லாம் SCHOOL திறக்கும் மற்றும் திறக்காது? முழு விவரம் உள்ளே!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News