அதிர்ச்சி தகவல்: 30 ஆண்டுகளாக வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் பெண்

ஆஸ்தா மோங்கியா என்ற பெண்ணிற்கு ஏற்பட்ட  பிறவி கோளாறால் அவரது தாடை எலும்பு வாயின் இருபுறங்களிலிருந்தும் மண்டை எலும்புடன் இணைந்திருந்தது, இதன் காரணமாக அவரால் வாயை திறக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 1, 2021, 07:13 PM IST
  • தில்லியை சேர்ந்த ஆஸ்தா மோங்கியா என்ற பெண்ணின் வாய் 30 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.
  • பிறவி கோளாறால் அவரது தாடை எலும்பு வாயின் இருபுறங்களிலிருந்தும் மண்டை எலும்புடன் இணைந்திருந்தது.
  • வரது முகம் முழுவதும் உள்ள இரத்த நாளங்களில் கட்டிகள் அதிகம் இருந்தது.
அதிர்ச்சி தகவல்: 30 ஆண்டுகளாக வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் பெண்  title=

டெல்லியின் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சீனியர் மேனேஜராக பணிபுரிந்த பெண்ணுக்கு ஏற்பட்ட  பிறவி கோளாறால் அவரது தாடை எலும்பு வாயின் இருபுறங்களிலிருந்தும் மண்டை எலும்புடன் இணைந்திருந்தது, இதன் காரணமாக அவரால் வாயை திறக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். வாயின் துவாரம் வழியாக விரலினால், அவரது நாக்கை கூட தொட முடியாத அளவிற்கு வாய் மூடியிருந்தது. பிறந்தது முதல், 30 ஆண்டுகளாக இந்த பெண் திரவ உணவுகளால் மட்டுமே உயிருடன் இருந்தாள். வாய் திறக்காததால், அவரது பற்களை சுத்தம் செய்ய முடியாததால், பற்களிலும் தொற்று ஏற்பட்டது.

அந்த பெண்ணிற்கு தனித்துவமான  ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  அந்த பெண்ணின் வாய் 30 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. தீவிர அறுவை சிகிச்சைக்கு பின் பெண்ணின் வாய் திறக்கப்பட்டது. ஆஸ்தா மோங்கியா என்ற அந்த 30 வயது பெண்ணிற்கு, தில்லியில் உள்ள  சர் கங்கா ராம் மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவில் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. 

ALSO READ | X-ray கொடுத்த ஷாக்... பிறப்பில் தான் ஆண் என்பதை அறிந்த மணமான பெண் அதிர்ச்சி..!!

ஆஸ்தா மோங்கியாவுக்கு பிறப்பிலிருந்தே இந்த சிக்கல்கள் இருந்தன. மிகப் பெரிய பிரச்சனை என்னவென்றால், அவரது முகம் முழுவதும் உள்ள இரத்த நாளங்களில் கட்டிகள் அதிகம் இருந்தது, இதன் காரணமாக எந்த மருத்துவமனைகளும் அறுவை சிகிச்சைக்கு தயாராக இல்லை. அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரை இந்தியா, இங்கிலாந்து மற்றும் துபாயில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் காண்பித்தனர், ஆனால் அனைவரும் அறுவை சிகிச்சை செய்ய மறுத்துவிட்டனர்.

சர் கங்காரம் மருத்துவமனையின் மூத்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜீவ் அஹுஜா, நோயாளியைப் பரிசோதித்த அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலானது என்றும், அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கு  மரணத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் குடும்பத்தினரிடம் கூறினார். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, வாஸ்குலர் அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்கவியல் துறையைச் சேர்ந்த ஒரு குழுவை சிக்கலான  இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டது

அறுவை சிகிச்சையின் போது, ​​நோயாளியின் வாய் இரண்டரை சென்டிமீட்டர் திறக்கப்பட்டது. ஒரு சாதாரண நபரின் வாய் 4 முதல் 6 சென்டிமீட்டர் வரை திறக்கும். பிசியோதெரபி மற்றும் வாய் பயிற்சிக்கு பிறகு அவர் தனது வாயை மேலும் திறக்க முடியும்  என்று மருத்துவர் ராஜீவ் அஹுஜா கூறினார்.

ALSO READ | Elon Musk காதலியின் வித்தியாசமான ஆசை: Insta போஸ்டால் பரபரப்பு!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News