இந்தியாவுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை தலிபான்கள் நிறுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா ஆப்கானிஸ்தான் இடையே நீண்டகால வர்த்தக தொடர்பு இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாகவே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருக்கிறது. ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 1000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.
தலிபான்களை சமாளிக்க முடியாமல் அரசு படைகள் திணறி வருகின்றன. பல்வேறு நாடுகளும் ஆப்கானிஸ்தான் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் இந்தியாவுனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை தலிபான்கள் நிறுத்தியுள்ளதாக இந்திய ஏற்றுமதி அமைப்பின் கூட்டமைப்பு இயக்குநர் அஜய் சகாய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானின் போக்குவரத்து வழிதடங்கள் வழியாகவே இந்தியாவுக்கு பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், ஆனால் தற்போது இறக்குமதி பொருள்கள் போக்குவரத்தை தாலிபான்கள் நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தாலிபான்கள் நாடு தழுவிய இராணுவ வெற்றியை உறுதிப்படுத்திய பின்னர் அதிபர் கானியுடன் நாட்டின் பல முக்கிய தலைவர்களும் நாட்டை விட்டு சென்றனர். இதனைத் அங்குள்ள மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இந்திய சார்பில் விமானம் மூலம் அங்கிருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும். கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!! Android Link - https://bit.ly/3hDyh4G Apple Link - https://apple.co/3loQYeRனம்