Citizenship Amendment Act: சமீபத்தில் அமலுக்கு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த பல கருத்துகள் நாடு முழுதும் பரப்பட்டு வருகின்றன. இதை பலர் வரவேற்றுள்ள நிலையில், பலர் இதை குறைகூறி வருகிறார்கள். இதனால், இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்ற கருத்து பலரிடம் உள்ளது. ஆனால், இது ஒரு முற்றிலும் தவறான கருத்தாகும். இந்த சட்ட திருத்தம், இந்திய முஸ்லிம்கள் தங்கள் உரிமைகளை அனுபவிக்கும் சுதந்திரத்தையும் வாய்ப்பையும் குறைக்காது. அவர்கள் மற்ற மதங்களைச் சேர்ந்த மற்ற இந்திய குடிமக்களைப் போலவே சுதந்திரம் பெற்றதில் இருந்து இருப்பது போலவே வழக்கமான உரிமையுடன் இருப்பார்கள். இது முற்றிலும் பிற நாடுகளிலிருந்து இந்தியா வரும் அகதிகளுக்கான சட்ட திருத்தமாகும்.
குடியுரிமை திருத்தச் சட்டம் (Citizenship Amendment Act), ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அல்லது பாகிஸ்தானில் மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்டு டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்த அகதிகளுக்கு விண்ணப்பத்திற்கான காலத்தகுதியை 11 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக குறைத்துள்ளது.
இந்த சட்ட திருத்தத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
இந்த சட்ட திருத்தத்தால் இந்திய முஸ்லீம்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் CAA -வில் அவர்களின் குடியுரிமையைப் பாதிக்கும் வகையில் எதுவும் இல்லை. தற்போது நாட்டில் உள்ள இந்துக்களை போன்று சம உரிமைகளை கொண்டுள்ள சுமார் 18 கோடி இந்திய முஸ்லிம்களுடன் இதற்கு எந்தத் தொடர்பும் இல்லை. இந்தச் சட்டத்திற்குப் பிறகு எந்தவொரு இந்தியக் குடிமகனும் தனது குடியுரிமையை நிரூபிக்க எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கும்படி கேட்கப்பட மாட்டார்கள்.
இந்த சட்ட திருத்தத்தின் அவசியம் என்ன?
வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுபான்மை இன மக்களின் மீது கருணை காட்டி அவர்களுக்கு ஆதரவு அளிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இது அவர்களது மகிழ்ச்சியான மற்றும் வளமான எதிர்காலத்திற்காக இந்தியக் குடியுரிமையைப் பெற அவர்களுக்கு வாய்ப்பளிக்கின்றது. குடியுரிமை முறையைத் சட்ட வர்வம்பிற்குள் கொண்டுவரவும், சட்டவிரோதமாக குடியேற்றங்களைத் தடுக்கவும் இந்தச் சட்டம் தேவைப்பட்டது.
வெளிநாட்டில் இருந்து குடியேறிய முஸ்லிம்களுக்கு ஏதேனும் கட்டுப்பாடு உள்ளதா?
எந்தவொரு நாட்டிலிருந்தும் குடியேறிய முஸ்லீம்கள் உட்பட அனைவரும், இந்தியக் குடிமகனாக இருக்க விரும்பும் எந்தவொரு நபரும், தற்போதுள்ள சட்டங்களின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். தற்போதைய விதிகளின் படி அந்த 3 நாடுகளில் உள்ள முஸ்லீம்கள் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதை இந்தச் சட்டம் தடுக்கவில்லை.
வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக குடியேறிய முஸ்லிம்களை திருப்பி அனுப்புவதற்கு ஏதேனும் ஏற்பாடு அல்லது ஒப்பந்தம் உள்ளதா?
புலம்பெயர்ந்தோரை இந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்புவதற்கு இந்த நாடுகளுடன் இந்தியா எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. இந்த குடியுரிமைச் சட்டம் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவதற்கானதல்ல. ஆகையால், CAA முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற கருத்து முற்றிலும் தவறானது.
முஸ்லிம்களுக்கு இந்திய குடியுரிமை பெற தடை உள்ளதா?
அப்படி ஒரு தடை கண்டிப்பாக இந்தியாவில் இல்லை. குடியுரிமைச் சட்டத்தின் 6வது பிரிவின் கீழ் இந்தியக் குடியுரிமையைப் பெற உலகில் எந்த நாட்டு முஸ்லிம்களுக்கும் எந்தத் தடையும் இல்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ