டெல்லி: இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பில் சேருவதற்கு கடந்த 2014 ஆம் ஆண்டு "நீட் தகுதித் தேர்வை" மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. கடந்த 3 ஆண்டுகளாக சிபிஎஸ்இ நிறுவனத்தால் நீட் தேர்வு நடத்தப்பட்டு வந்தது.
நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மே 5 ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. மே 5 ஆம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெறுகிறது. நாளை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு தேர்வு நடைபெறும். நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்பட 11 மொழிகளில் நடைபெறுகிறது.
நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஃபானி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள ஒடிசா மாநிலத்தில் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மற்ற மாநிலங்களில் நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும் ஒடிசா மாநிலத்தில் நீட் தேர்வு எப்பொழுது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.