புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA - சிஏஏ) எதிர்ப்புத் தெரிவித்து, ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகப் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று (வியாழக்கிழமை) அந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாமியா பகுதியில் இருந்து ராஜ்காட் வரை நடைப்பயணம் மேற்கொள்ளப்பட விருந்தது. அந்த சமயத்தில் ஒரு இளைஞன் "ஜெய் ஸ்ரீ ராம்' என்றுக் கூறிவிட்டு, "நான் ராம் பக்த கோபால், நான் உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன்' என்று கூறி துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவர் படுகாயம் அடைந்தார். காயமடைந்த மாணவர் ஜாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
மாணவரின் பெயர் சதாப் என்று கூறப்படுகிறது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஜாமியா நிர்வாகத்தின் கூற்றுப்படி, சதாப் ஜாமியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். படிக்கும் போது, ஷாதாப் ஜாமியாவின் நாடகக் கழகத்தில் (நாடக) உறுப்பினராக இருந்தார். அவர் ஒரு நல்ல பாடகர் மற்றும் சிறந்த புகைப்படக்காரர். சதாப் அவரது நண்பர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் காவல்துறை மற்றும் ஊடகங்களை அச்சுறுத்தியதாகவும், அது மாணவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. தகவல்களின்படி, இந்த நபர் அனைவருக்கும் சுதந்திரம் தருவேன் என்று கூறிக்கொண்டு அங்கு சுற்றிக்கொண்டு இருந்ததாக பார்த்தவர்கள் கூறுகிறார்கள். இந்த இளைஞனின் கையில் ஒரு தேசி கட்டா (நாட்டு துப்பாக்கி) இருந்ததாகக் கூறப்படுகிறது.
தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்தை அடைந்தனர். இதுகுறித்து பேசிய DCP சின்மய் பிஷ்வால், "அந்த இளைஞன் முதலில் துப்பாக்கியை திறந்த வெளியில் சுட்டுள்ளான். அதன் பிறகு மாணவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளான். அந்த வீடியோ எங்களுக்கு கிடைத்துள்ளது. அந்த இளைஞனை சம்பவ இடத்திலேயே கைது செய்தோம். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தனது பெயரை ராம் பக்த கோபால் என்று கூறியுள்ளார். அவர் டெல்லி NCR பகுதியான நொய்டாவில் வசிப்பவர் என்று கூறியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடந்த இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். மறுபுறம், இந்த சம்பவம் காரணமாக, டெல்லி காவல்துறையினர் மத்திய டெல்லியில் ஜமா மஸ்ஜித் பகுதியில் கூடுதல் போலீஸ் படையை அவசரமாக அதிகரித்துள்ளனர். ஏனெனில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான அணிவகுப்பு ஜமா மஸ்ஜித்தை அடைய வேண்டியிருந்தது.
அதன் பிறகு ஜமா மஸ்ஜித்தில் இருந்து ராஜ்காட்டை நோக்கி செல்ல இருந்தது. ஆனால் ராஜ்காட் நோக்கி அணிவகுப்பு செல்ல காவல்துறை மறுத்துவிட்டது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது