Jharkhand Champai Soren News: ஹேமந்த் சோரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நெருக்கமானவராக கருதப்படும் சம்பை சோரன், செரைகெல்லா சட்டமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் தற்போது போக்குவரத்து, பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பட்டியல் சாதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், ஜேஎம்எம் துணைத் தலைவராகவும் உள்ளார். ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால், அடுத்து அவர் தனது மனைவி கல்பனா சோரனை முதல்வராக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்த நிலையில், கடைசி கட்டத்தில் சம்பை சோரன் எப்படி முதல்வர் பதவிக்கு தேர்ந்தேடுக்கப்பட்டார்? சம்பை சோரன் யார்? அவரின் அரசியல் பயணம் என்ன? அவரது குடும்ப பின்னணி என்ன? போன்ற விவரங்களை பார்ப்போம்.
யார் இந்த சம்பை சோரன்?
ஜனவரி 1, 1961 அன்று ஜாம்ஷெட்பூரில் ஒரு ஆதிவாசி குடும்பத்தில் பிறந்த சம்பாய் சோரன் ஒரு முக்கிய சமூக சேவை வழக்கறிஞராக இருந்துள்ளார். இவரது தந்தை சிமல் சோரன் ஒரு விவசாயி. சம்பை சோரன் 10 ஆம் வகுப்பு வரை படித்தார், அதைத் தொடர்ந்து அவர் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 4 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர்.
'ஜார்கண்ட் புலி' சம்பை சோரன்
ஜேஎம்எம் நிறுவனர் ஷிபு சோரன் மற்றும் அவரது மகன் ஹேமந்த் ஆகிய இருவரிடமும் நம்பிக்கையுடன் இருந்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தை உருவாக்குவதற்கான இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார்.
பீகாரில் இருந்து தனி ஜார்க்கண்ட் மாநில கோரிக்கை தொடங்கியது. ஜார்கண்ட் இயக்கத்தில் ஷிபு சோரனுடன் இணைந்த சம்பை சோரன் பல போராட்டங்களை மேற்கொண்டார். இவர் 'ஜார்கண்ட் புலி' என்ற அடைமொழியுடன் மிகவும் பிரபலமானார்.
சம்பை சோரன் அரசியல் பயணம்
முதன்முதலில் 1991 ஆம் ஆண்டு செரைகேலா தொகுதியில் சம்பை இடைத்தேர்தலில் போட்டியிட்டார். சுயேட்சையாக போட்டியிட்டு இந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.
மேலும் படிக்க - Hemant Soren: ஹேமந்த் சோரன் கைது...? அடுத்த ஜார்க்கண்ட் முதலமைச்சர் இவரா?
இதற்குப் பிறகு 1995 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் 2000 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வியடைந்தார். அடுத்து 2005 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இதுவரை எந்தத் தேர்தலிலும் அவர் தோல்வி அடையவில்லை.
2010 ஆம் ஆண்டு அர்ஜுன் முண்டா தலைமையிலான பாஜக ஆட்சியில் சம்பாய் சோரன் கேபினட் அமைச்சராகப் பணியாற்றினார். அதன் பிறகு ஜார்க்கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
2015 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் அமைச்சராக பதவியேற்றார். அப்பொழுது உணவு, சிவில் சப்ளை மற்றும் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றினார்.
2019 இல் ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்த போது, தற்போது போக்குவரத்து, பழங்குடியினர், பட்டியல் சாதிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக சம்பாய் சோரன் உள்ளார்.
முதல்வர் பதவி எப்படி கிடைத்தது?
நிலமோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை தீவிரமடைந்தபோது, அவர் தனது மனைவி கல்பனா சோரனை முதல்வராக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்தன. இதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் சம்பாய் சோரன் பெயர் அறிவிக்கப்பட்டது. சம்பாய் சோரன், ஹேமந்த் சோரன் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல, ஆனால் ஹேமந்த் சோரன் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்.
மேலும் படிக்க - ஜார்கண்ட் பரபரப்பு: ஆட்சி அமைக்க கோரிக்கை! 5.30 மணிக்கு நேரம் ஒதுக்கிய ஆளுநர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ