ரஃபேல் போர் விமானங்கள் அம்பாலாவுக்கு கொண்டு வரப்படும் ரகசியம் என்ன?

ரஃபேல் விமானம் பலவிதமான சக்திவாய்ந்த ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்தப் போர் விமானங்கள் ஏன் அம்பாலாவுக்கு கொண்டு வரப்படுகிறது தெரியுமா?

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 29, 2020, 06:59 PM IST
  • அம்பாலா விமான நிலையத்திலிருந்து லே 427 கி.மீ தொலைவில் உள்ளது
  • அம்பாலா விமான நிலையத்திலிருந்து கார்கில் 456 கி.மீ தொலைவில் உள்ளது
  • அம்பாலாவில் இருந்து எல்.ஏ.சி மற்றும் எல்.ஓ.சியையும் கண்காணிப்பது எளிது
ரஃபேல் போர் விமானங்கள் அம்பாலாவுக்கு கொண்டு வரப்படும் ரகசியம் என்ன?  title=

புதுடெல்லி: பிரான்ஸிடம் இருந்து இந்தியா வாங்கியுள்ள ரஃபேல் போர் விமானங்களின் முதல் ஐந்து போர் விமானங்கள் ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்திற்கு வந்து சேரும். இந்தியாவிற்கு வரும் இந்தப் போர் விமானங்கள் ஏன் அம்பாலாவுக்கு கொண்டு வரப்படுகிறது தெரியுமா?

17th Golden Arrow Squadronஇல் ரஃபேல் விமானங்கள் வந்து சேரும்... பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான பதற்றங்களுக்கு இடையில்  வரும் பதற்றம் காரணமாக, இந்த இரு நாட்டின் எல்.ஏ.சி மற்றும் எல்.ஓ.சியையும் கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமல்ல, தேவைப்பட்டால், சில நிமிடங்களில் தாக்குதலும் நட்த்த வேண்டும் என்ற உத்தியின் அடிப்படையிலேயே அம்பாலா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
 
அம்பாலா விமான நிலையத்திலிருந்து லே 427 கி.மீ தொலைவில் உள்ளது. இது எல்.ஏ.சிக்கு மிக அருகில் உள்ளது .. அம்பாலா விமான நிலையத்திலிருந்து கார்கில்  456 கி.மீ தொலைவில் உள்ளது. இது எல்.ஓ.சிக்கு அருகில் உள்ளது .. அதேசமயம் பாகிஸ்தான் எல்லை அம்பாலா விமான நிலையத்திலிருந்து 220 கி.மீ. என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற சூழ்நிலையில், அம்பாலாவில் ரஃபேல் போர் விமானங்கள் நிலைநிறுத்தப்படுவதால், இரு முனைகளிலும் கிட்டத்தட்ட சமமான தூரம் இருக்கும் .. ரஃபேல் ஒரு மணி நேரத்திற்கு 2,000 கி.மீ வேகத்தில் பறக்கும் என்பதால், அவசரகால நடவடிக்கை எடுப்பதற்காக ரஃபேல் விமானங்கள் அம்பாலா விமான தளத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

1919 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அம்பாலா விமானப்படை நிலையம் LAC மற்றும் LOC ஆகியவற்றிலிருந்து சமமான தூரத்தில் உள்ளது .. தற்போது இங்கு Jaguar Combat மற்றும் second MiG-21 Bison என இரண்டு படைப்பிரிவுகள் இங்கு நிறுத்தப்பட்டுள்ளன. 

மிக் -21 இன்னும் சில ஆண்டுகளில் இங்கிருந்து அகற்றப்படும் சூழ்நிலையில், ரஃபேல் போர் விமானங்கள் அம்பாலாவில் நிலைநிறுத்தப்படுவது மிகவும் முக்கியமானது ..  இந்தியாவின் பெரும்பாலான போர் விமானங்கள் அம்பாலாவில் நிலைநிறுத்தப்பட்டிருப்பதும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை குறிப்பாக சொல்லலாம்.
வல்லமை வாய்ந்த சூப்பர்சோனிக் ஏவுகணைகளின் படைப்பிரிவான பிரம்மோஸ் அம்பாலாவில் தான் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.  

Read Also | இந்தியாவிற்கு வர தயாராகும் ரஃபேல் விமானம்

அம்பாலா விமான நிலையத்திலிருந்து திபெத் 1152 கி.மீ தொலைவில் தான் உள்ளது. இந்த தொலைவை ரஃபேல் 30 நிமிடங்களில் சென்றடைந்துவிடும். அம்பாலா விமான நிலையத்திலிருந்து 3720 கி.மீ. தொலைவில் உள்ள பெய்ஜிங்கை ரபேல் சுமார் 100 நிமிடங்களில் சென்றடைந்துவிடும்.

ஹாங்காங், அம்பாலா விமான நிலையத்திலிருந்து 3811 கி.மீ தூரத்தில் உள்ளது .. ரஃபேல் ஹாங்காங்கை 120 நிமிடங்களில் சென்றடைந்துவிடும்.  

அதாவது, போர் போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் ஏற்பட்டால், ஒரு மணி நேரத்திற்குள் சீனாவின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த விமான தளங்களை ரஃபேல் விரைவில் தாக்க முடியும்...

அம்பாலா ஏர்பேஸிலிருந்து இஸ்லாமாபாத் வரை 509 கி.மீ தூரத்தில் இருக்கிறது. ரஃபேல் போர் விமானம் வெறும் 13 நிமிடங்களில் அங்கு சென்றடைந்துவிடும். அதேபோல் கராச்சி, அம்பாலாவில் இருந்து 1141 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் வெறும் 32 நிமிடங்களில் ரஃபேல் அங்கு சென்றடைய முடியும்.  பாகிஸ்தானின் லாகூரை ரஃபேல் வெறும் 10 நிமிடங்களில் சென்றுவிடும்.  ஏனென்றால், லாகூருக்கும் அம்பாலாவுக்கும் இடையிலான தொலைவு 264 கி.மீ தான்..  

டெல்லியில் இருந்து 200 கி.மீ தூரத்தில் அம்பலா ஏர்பேஸ் உள்ளது .. இது டெல்லியில் வெஸ்டர்ன் ஏர் கமாண்டின் அதிகாரத்தின் கீழ் வருகிறது. 2019 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில், பாகிஸ்தானின் பாலகோட்டில் வான்வழித் தாக்குதல் நடத்தப்படும்போது மீராஜ் இங்கிருந்து தான் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

அதுமட்டுமல்ல, 1999 ஆம் ஆண்டு கார்கில் போரின்போதும்,  அம்பாலா விமானத் தளம் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது ...  
ரஃபேல் விமானம் பலவிதமான சக்திவாய்ந்த ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இதில் ஐரோப்பிய ஏவுகணை தயாரிப்பாளரான MBDA நிறுவனத்தின் கண்ணுக்கு புலப்படாத தூரம் வரை சென்று தாக்க வல்ல ஏவுகணை, அனைத்து வகை வானிலையில் இயங்கக்கூடிய தொலை தூரம் வரை சென்று எந்த இலக்கையும் தாக்கக் கூடிய MICA ஏவுகணை  ஆகியவை அடங்கும்.

Trending News