அரையிறுதியில் தோற்ற BJP, இறுதி போட்டியிலும் தோற்கும் -மம்தா பானர்ஜி!

ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி, அநீதிக்கு எதிரான வெற்றி, கல்வி நிலையங்களை அழித்து, நிதி நிறுவனங்களை தவறாக பயன்படுத்தி வரும் அரசினை மக்கள் எதிர்த்து வருகின்றனர்

Last Updated : Dec 11, 2018, 01:27 PM IST
அரையிறுதியில் தோற்ற BJP, இறுதி போட்டியிலும் தோற்கும் -மம்தா பானர்ஜி! title=

சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது முதல் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகின்றது. அதேவேலையில் தெலங்கானாவில் சந்திர சேகர ராவ்-வின் ராஷ்டிரிய சமிதி கட்சியும், மிசோரமில் மிசோ தேசிய முன்னணி கட்சியும் முன்னிலை வகித்து வருகின்றது. மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கிடையே இழுபறி நிலவி வருகின்றது.

ஆளும் மாநிலங்களில் கூட பாஜக பின்னடைவை கண்டுள்ளது. இந்நிலையில் பாஜக-வின் பின்னடைவினை குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...

"பாஜக-விற்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். இது இந்திய மக்களின் வெற்றி.

ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி, அநீதிக்கு எதிரான வெற்றி, கல்வி நிலையங்களை அழித்து, நிதி நிறுவனங்களை தவறாக பயன்படுத்தி வரும் அரசினை மக்கள் எதிர்த்து வருகின்றனர் என்பது இந்த முடிவுகள் தெரிவிக்கின்றது. ஏழைகளுக்கு ஆதரவு அளிக்காத ஆட்சியினை மக்கள் வெளியேற்ற விரும்புகின்றனர் என்பதை இந்த முடிவுகள் தெரிவிகின்றது.

அனைத்து மாநிலங்களிலும் பாஜக இல்லை என்பதை இந்த அரையிறுதி நிரூபித்து விட்டது. 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இறுதி போட்டியில் நாட்டில் பாஜக இல்லை என்பது முழுமையாக வெளிப்படும்" என தெரிவித்துள்ளார்!

Trending News