அரசுத் துறையில் முறைகேடை தடுக்க புது வழிகளை உருவாக்க வேண்டும்: மோடி

வருகிற 2022 ஆம் ஆண்டுக்குள் ஆதார அடிப்படையிலான கொள்கையை வடிவமைப்பதை நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றுவது அரசின் இலக்கு என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Last Updated : Nov 22, 2019, 09:44 AM IST
அரசுத் துறையில் முறைகேடை தடுக்க புது வழிகளை உருவாக்க வேண்டும்: மோடி title=

வருகிற 2022 ஆம் ஆண்டுக்குள் ஆதார அடிப்படையிலான கொள்கையை வடிவமைப்பதை நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றுவது அரசின் இலக்கு என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டெல்லி: இந்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அலுவலகத்தில் நேற்று பிரதமர் மோடி தலைமையிலான கணக்காயர்கள் மாநாடு நடைபெற்றது. அதில், ஆதார அடிப்படையிலான கொள்கையை வடிவமைப்பது நாட்டிற்கு புதிய அடையாளத்தை தரும் என்று அவர் குறிப்பிட்டார். இதில் ஒரு அங்கமாக கணக்கு தணிக்கை அமைப்பு புதிய வடிவத்தை எட்டுமென்ற அவர், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நாடு எட்டிப்பிடிக்க கணக்கு தணிக்கையாளர்களின் பங்களிப்பு அவசியம் என்றார்.

மிக துல்லியமான கணக்கு தணிக்கையை அனைவரும் விரும்பும் நிலையில், தணிக்கையாளர்கள், தங்கள் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அவர் கூறினார். முன்னதாக, CAG அலுவலகத்தில் மகாத்மா காந்தியின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

அந்த மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமா் மோடி பேசியதாவது: வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை ரூ.350 லட்சம் கோடியாக உயா்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கு கணக்குத் தணிக்கைத் துறை முக்கியப் பங்காற்ற வேண்டும்.

தொழில் சார்ந்த முறைகேடுகளைத் தடுப்பதற்கு புதுமையான வழிமுறைகளை தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகம் கண்டறிய வேண்டும். மேலும், அரசுத் துறைகளில் ஊழல்களை வேரறுப்பதற்கு புதுமையான முறைகளை கணக்குத் தணிக்கை அலுவலகம் உருவாக்க வேண்டும். அரசு நிர்வாகத்தை மேம்படுத்துவதில் கணக்குத் தணிக்கையாளா்கள் சிறந்த பங்களிப்பு செலுத்த முடியும் என அவர் தெரிவித்ர்தார்.  

 

Trending News