ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு சாப்பிட்டதால் அராஜகம்; பல மாணவர்கள் படுகாயம்

JNU Meat Controversy Latest Update: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 11, 2022, 10:58 AM IST
  • சர்ச்சைக்குரிய வீடியோவை ஏபிவிபி வெளியிட்டது
  • SFI தலைவர் ஆரஞ்சு நிற சட்டையில் காணப்படுகிறார்
  • AISA மீது ஏபிவிபி குற்றம் சாட்டுகிறது
ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு சாப்பிட்டதால் அராஜகம்; பல மாணவர்கள் படுகாயம் title=

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அசைவம் சாப்பிடுவது மற்றும் ராம நவமி வழிபாடு குறித்த சர்ச்சை தொடங்கியதையடுத்து, டெல்லி போலீசார் இரவு வரை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் குவிக்கப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் இடதுசாரி அமைப்புகள் மற்றும் ஏபிவிபி மாணவர்களிடையே மோதல்கள் வெடித்தன. பிற்பகலில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, போலீசார் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை அடைந்தனர், ஆனால் இதையும் பொருட்படுத்தாமல், இரவில் மாணவர்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டதாக மாணவர்கள் கூறுகிறார்கள். இதை முன்னிட்டு இரவு நேரத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஜேஎன்யு நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று போலீசார் வளாகத்திற்கு விரைந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவட்க்தில் ஏபிவிபியினர் விடுதி செயலாரையும் தாக்கியக்கி உள்ளனர். அத்துடன் இரவு உணவு மெனுவை மாற்றவும், அதில் அனைத்து மாணவர்களுக்கும் வழக்கமாக வழங்கப்படும் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மெஸ் கமிட்டியை வற்புறுத்தி தாக்கினர். ஜேஎன்யு மற்றும் அதன் விடுதிகள் அனைவருக்கும் பொதுவான இடமாகும். அது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் சொந்தமானது இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் படிக்க | விடுதி அறையில் இறந்து கிடந்த மாணவர்!!

இதனை எதிர்த்த ஏபிவிபி அமைப்பினர் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் விடுதியில் ஒரு பூஜை ஏற்பாடு செய்வதைத் தடுக்க முயன்றனர் என்று குற்றம்சாட்டியுள்ளது. சில சாதாரண மாணவர்கள், ராமநவமியை முன்னிட்டு மாலை 3.30 மணிக்கு காவிரி விடுதியில் பூஜை மற்றும் ஹவன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த பூஜையில் ஏராளமான ஜேஎன்யு மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கு இடதுசாரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, பூஜையை நடத்தவிடாமல் தடுத்தனர். இருப்பினும், ராம நவமி பூஜை பின்னர் நிரைவு பெற்றது. 

 

 

இது தவிர, உணவு உரிமை தொடர்பாக தேவையற்ற சலசலப்பை ஏற்படுத்த முயன்றார். அந்தந்தப் பண்டிகைகளை அமைதியாகக் கொண்டாடும் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் சமத்துவமின்மையையும் சாதி ஒழிப்பையும் ஏற்படுத்த இடதுசாரிகள் முயற்சிக்கின்றனர். மாணவி திவ்யா மற்றும் மாற்றுத்திறனாளி மாணவியை இடதுசாரி அமைப்புகள் தாக்கியதாக ஏபிவிபி பொதுச் செயலாளர் நிதி திரிபாதி குற்றம்சாட்டியுள்ளார்.

அனைத்திந்திய மாணவர் சங்கத்தின் (ஏஐஎஸ்ஏ) தேசிய தலைவர் என் சாய் பாலாஜி கூறுகையில், நானும் தாக்கப்பட்டேன். மெஸ்ஸில் சாப்பாடு என்ன செய்வது என்பது அங்குள்ள மாணவர்களால் நடத்தப்படும் மெஸ் கமிட்டிதான் முடிவு செய்யும் என்றார். ஆனால் ஏபிவிபியை சேர்ந்த மாணவர்கள் மெஸ்ஸில் அசைவம் செய்வதை தடுத்து நிறுத்தி அடித்து உதைத்தனர். இரவில் எங்கள் மீது கற்கள் வீசப்பட்டது. யார் என்ன சாப்பிடுவது, எதை உடுத்துவது என்பதை ஜேஎன்யு மாணவர்களே முடிவு செய்வார்கள் என்றார். இத்னால் இது போன்ற செயலுக்கு ஏபிவிபி அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்நிலையில் போலீசார் வளாகத்தை அடைந்ததும், மாணவர்கள் மஹி மாண்ட்வி விடுதியில் திரண்டனர். வளாகத்தில் நள்ளிரவில் கண்டன ஊர்வலம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த சம்பவத்திற்கு மாணவர் அமைப்புகள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இரு தரப்பினரும் குவிக்கப்பட்டதையடுத்து, வளாகத்தில் போலீஸ் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | வன்முறைக்கு எதிரான கண்டன போராட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய போஸ்டர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News