18-44 வயதினருக்கான தடுப்பூசி செயல்முறையை தற்காலிகமாக நிறுத்த வேண்டியிருக்கும்: டெல்லி எம்.எல்.ஏ

டெல்லியில் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு கோவிட் -19-க்கு எதிரான தடுப்பூசி செயல்முறையை திங்கள் முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வெண்டி இருக்கும் என ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ ஆதிஷி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 21, 2021, 08:11 PM IST
  • டெல்லியில் தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது.
  • 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு கோவிட் -19-க்கு எதிரான தடுப்பூசி செயல்முறையை நிறுத்த வேண்டியிருக்கும்-ஆதிஷி.
  • டெல்லியில் கருப்பு பூஞ்சை நோயால் 197 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
18-44 வயதினருக்கான தடுப்பூசி செயல்முறையை தற்காலிகமாக நிறுத்த வேண்டியிருக்கும்: டெல்லி எம்.எல்.ஏ title=

டெல்லியில்: டெல்லியில் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு கோவிட் -19-க்கு எதிரான தடுப்பூசி செயல்முறையை திங்கள் முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வெண்டி இருக்கும் என ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ ஆதிஷி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

டெல்லியில் (Delhi) தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளதால், தடுப்பூசி செலுத்தும் செயல்முறையை இப்போதைக்கு தொடர முடியாமல் போகலாம் என அவர் கூறினார். 45 க்கு மேற்பட்டவர்களுக்கான கோவாக்சின் தடுப்பூசியிலும் ஒரு நாளைக்கும் குறைவான இருப்பே உள்ளது என்றும் அவர் கூறினார். 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கோவிஷீல்ட் தடுப்பூசி இருப்பு எட்டு நாட்கள் நீடிக்க வாய்ப்புள்ளது என்றார் அவர். டெல்லியில் வியாழக்கிழமை 77,438 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டன. 

இதற்கிடையில், டெல்லியில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துண்டு உள்ளது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோயால் 197 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், டெல்லியில் தடுப்பூசிகளின் இருப்பு காலியாகிக்கொண்டிருக்கிறது என்றும், விரைவாக மத்திய அரசு தேவையான தடுப்பூசிகளை டெல்லிக்கு வழங்க வேண்டும் என்றும் கூறினார். 

ALSO READ: கருப்பு பூஞ்சைக்கான மருந்து தயாரிக்க மேலும் 5 நிறுவனங்களுக்கு உரிமம்: மத்திய அரசு

கோவிட் (COVID) தொற்றுநோயைத் தொடர்ந்து சில நோயாளிகளைத் தாக்கும் கருப்பு பூஞ்சை நோய் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த நோயை அறிவிக்கப்பட வெண்டிய நோயாக சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது. அதாவது, இனி, அனைத்து மாநிலங்களும் இந்த நோயின் சந்தேகத்திற்கிடமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் குறித்த விவரங்களை ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்திற்கு (IDSP) தெரியப்படுத்துவது கட்டாயமாக்கியது.

முன்னதாக, தடுப்பூசி இருப்பு குறித்து மே மாதம் 11 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ஆதிஷி, டெல்லியில் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி இருப்பில் இல்லை என்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்படும் 125 மையங்களை மூட வேண்டி இருக்கும் என்றும் தெரிவித்தார்.

"நம்மிடம் 18-44 வயதினருக்கான கோவாக்சின் (Covaxin) தடுப்பூசிகளுக்கான இருப்பு தற்போது இல்லை. இவை செலுத்தப்படும் சுமார் 125 தடுப்பூசி மையங்களை செவ்வாய்க்கிழமை மாலைக்குப் பிறகு மூட வேண்டி இருக்கும்" என்று அப்போது அதிஷி தெரிவித்திருந்தார். 

இதற்கிடையில், 27000-க்கும் மேற்பட்ட ஒரு நாள் தொற்று எண்ணிக்கையைக் கொண்டிருந்த டெல்லியில் ஊரடங்குக்குப் பிறகு தொற்று எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: COVID Alert: டெல்லியில் 18-44 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி காலியானது: டெல்லி எம்.எல்.ஏ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News