ரேஷன் கடைகளில் ரொக்கமில்லா பண பரிவர்த்தனை -மத்திய அரசு

Last Updated : Dec 23, 2016, 02:30 PM IST
ரேஷன் கடைகளில் ரொக்கமில்லா பண பரிவர்த்தனை -மத்திய அரசு  title=

ரேஷன் கடைகளில் மார்ச் மாதத்துக்குள் மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனை அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் உள்ள 5.27 லட்சம் ரேஷன் கடைகளில் மார்ச் மாதத்திற்குள் மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் திட்டம் அமல்படுத்தப்படும் எனவும்,  இந்த திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் எனவும் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். 

மக்கள் அனைவரையும் ரொக்கமில்லா பண பரிவர்த்தனைக்கு மாற மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த புதிய திட்டத்தால் ஏடிஎம் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். இதன்மூலம் ரொக்கமில்லா பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரொக்கமில்லா பரிமாற்றத்திற்கு மாற வேண்டிய ஒரு வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. கறுப்பு பணம் இல்லாத இந்தியா உருவாக்குவதை நாம் இணைந்து உறுதி செய்வோம் என மோடி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News