"காந்தி" என பெயர் போட்டுக்கொண்டால் அவர்கள் "மகாத்மா" ஆகிவிட முடியாது: கிரிராஜ் சிங்

காந்தி என்ற பெயரை கடன் வாங்கி, தங்கள் பெயருக்கு பின்னால் போட்டுக்கொண்டால், அவர்கள் உண்மையான "காந்தி" ஆக ஆகிவிட முடியாது என்று கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 14, 2019, 03:21 PM IST
"காந்தி" என பெயர் போட்டுக்கொண்டால் அவர்கள் "மகாத்மா" ஆகிவிட முடியாது: கிரிராஜ் சிங் title=

புதுடெல்லி: காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியை இலக்கு வைத்து தாக்கிய பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங். காந்தி என்ற பெயரை கடன் வாங்கி, தங்கள் பெயருக்கு பின்னால் போட்டுக்கொண்டால், அவர்கள் உண்மையான "காந்தி" ஆக ஆகிவிட முடியாது என்று கிரிராஜ் சிங் கூறியுள்ளார். அதாவது இன்று டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் நடந்த "பாரதத்தை காப்போம்" பேரணியில் ராகுல் காந்தி பேசுக்கு கிரிராஜ் சிங் பதிலளித்துள்ளார்.

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரின் புகைப்படத்தை ட்வீட் செய்து கருத்தை பகிந்துள்ளர். "வீர் சாவர்க்கர்" ஒரு உண்மையான தேசபக்தர்... காந்தி பெயரை தன் குடும்பத்துக்கு சூட்டிக்கொண்டால், அவர்கள் தேசபக்தராக இருக்க முடியாது. ஒரு தேசபக்தராக இருக்க, நரம்புகளில் தூய இந்திய இரத்தம் தேவை எனக் கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவை மாறுவேடமிட்டு பலர் கொள்ளையடித்திருக்கிறார்கள். இப்போது அது நடக்காது. இந்த மூவரும் யார்?? இந்த மூன்று பெரும் நாட்டின் குடிமக்களா?? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுல் காந்தி அப்படி என்ன சொன்னார்?

டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற "பாரதத்தை காப்போம்" பேரணியில் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பாஜக மீது கடுமையான தாக்குதல் நடத்தினார். அப்பொழுது ராகுல் காந்தி, "ரேப் இன் இந்தியா" விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் பாஜக என்னிடம் கூறியது, ஆனால் எனது பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல, எனது பெயர் ராகுல் காந்தி, நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தவறிய பிரதமர் மோடி தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். நாட்டு மக்களிடம் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.

பணமதிப்பிழப்பு பிரச்சினையை பற்றி பேசிய ராகுல், "கறுப்புப் பணத்திற்கு எதிராக போராட வேண்டும் என்று மோடி ஜி மக்களிடம் பொய்களை கூறினார். பொது மக்களின் பைகளில் இருந்து பணத்தை எடுத்து, அதானி மற்றும் அனில் அம்பானிக்கு கொடுத்தார் என கடுமையாக பிரதமர் மோடி மீது விமர்சனத்தை வைத்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் ஜிடிபி 9% வரை இருந்தது. அப்போது பொருளாதாரத்தில் சீனாவுடன் இந்தியா போட்டி போட்டு வந்தது. ஆனால் இன்று வெங்காயத்திற்கு மக்கள் கையேந்தி தெருவில் நிற்கிறார்கள்.

இந்திய மக்களிடம் பல பொய்களை கூறியதற்காக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ராகுல் காந்தி கூறினார். எதிரிகள் நம்மை அழிக்கவில்லை. பிரதமர் மோடி தான் அதனை செய்துள்ளார்

எத்தனை விவசாயிகள் இறந்துள்ளார்கள் என்று மோடி அரசு தெரியாது. அவர்களுக்கு விவசாயிகளைப் பற்றி எந்தவித கவலையும் இல்லை. பெரும் முதலாளிகளைப் பற்றி மட்டுமே அவருகளுக்கு கவலை என்றார். எப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களை பற்றி பிரதமர் மோடிக்கு கவலை இல்லை. அங்கு போராட்டம் நடைபெற்ற முக்கிய காரணம் மத்திய அரசு தான். இவ்வாறு சரமாரியான குற்றசாட்டுக்களை மத்திய அரசு மீது வைத்தார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News