மம்தாவிற்கு ஏதோ பிரச்சனை உள்ளது -பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு!

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி-க்கு இயல்பாக இல்லை, அவருக்கு ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது என பாஜக அமைச்சசர் பபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார்!

Last Updated : Jun 3, 2019, 10:52 AM IST
மம்தாவிற்கு ஏதோ பிரச்சனை உள்ளது -பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு! title=

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி-க்கு இயல்பாக இல்லை, அவருக்கு ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது என பாஜக அமைச்சசர் பபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார்!

கடந்த சில தினங்களாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இயல்பு நினையில் இல்லை எனவும், மேற்கு வங்கத்தில் பாஜக-வின் எழுச்சி கண்டு ஏதோ பிரச்சனைக்கு ஆளாகியுள்ளார் எனவும் பாஜக அமைச்சர் பபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே பல வருட அரசியல் அனுபவம் கொண்ட அவரால் ‘ஜெ ஸ்ரீ ராம்’ என்னும் கோஷங்களை ஏற்றொக்கொள்ள இயலவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் சிறிது காலம் மம்தா அரசியல் விட்டு விலகி இருக்க வேண்டும் எனவும் பரிந்துறை செய்துள்ளார். 

முன்னதாக பாஜக சார்பில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 10 லட்சம் 'ஜெய் ஸ்ரீ ராம்' தபால் கார்டுகளை அனுப்பத் திட்டமிட்டு இருப்பதாக மேற்கு வங்க மாநிலம் பராக்பூர் தொகுதியின் பாஜக எம்.பியான அர்ஜீன் சிங் தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மம்தா பானர்ஜி தனது முகப்புத்தகத்தில் பதிவிடுகையில்., "பாஜக தனது சுயலாபத்திற்காக மதத்தையும், அரசியலையும் கலந்து வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ராம்ஜி கி, ராம் நாம் சத்யா ஹை, போன்ற ராம நாமங்கள் மதத்துடன் மட்டுமின்றி சமூக ரீதியாகவும் தொடர்பு கொண்டவை. மதத்தின் மீதான மக்களின் இந்த உணர்வுகளை திரினாமுல் காங்கிரஸ் என்றும் மதிக்கும்.

ஆனால் பாஜக-வினரோ ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்னும் கோஷத்தை தங்களது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி வருகிறது. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை பரப்புவதர்காக இதனை அக்கட்சியினர் செய்து வருகின்றனர்.

பாஜக-வின் இநுத சதியை நாம் அனைவரும் ஒன்றுப்பட்டு எதிர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கட்சி தொடர்பான தனிப்பட்ட கோஷங்களிலும் தனக்கு பிரச்சனைகள் ஏதும் இல்லை. எங்கள் கட்சியின் முழக்கம் ஜெய் ஹிந்த், வந்தே மாதிரம், அதேப்போல் இடது சாரிகளின் முழக்கம் இன்குலாம் ஜிந்தாப்பாத், மற்றவர்கள் வேறு முழக்கங்களை கொண்டுள்ளனர். ஆனால் பாஜக மதரீதியான முழக்கத்தை அரசியலுக்காக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Trending News