#UnionBudget2019 live: 2019-20 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் முழு விவரம்..!

வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவுக்கு வந்து படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் நடப்பு ஆண்டிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

Last Updated : Jul 5, 2019, 01:55 PM IST
#UnionBudget2019 live: 2019-20 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் முழு விவரம்..! title=

 

Jul 5, 2019 1:30 PM 

தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோகங்கள் மீதான விருப்ப வரியை 10% முதல் 12.5% ஆக உயர்த்தவும் முன்மொழியப்பட்டது. 

மலிவு வீட்டுவசதிக்கு மேலும் உத்வேகம் அளிக்க, ரூ .45 லட்சம் வரை வீடு வாங்குவதற்காக 2020 மார்ச் 31 வரை கடன் வாங்கிய கடன்களுக்கு செலுத்தப்பட்ட வட்டிக்கு 1.5 லட்சம் ரூபாய் கூடுதல் விலக்கு


Jul 5, 2019 1:12 PM 

பட்ஜெட் உரையை நிறைவு செய்தார், நிர்மலா சீதாராமன், சுமார் 2 மணி நேரம் 5 நிமிடங்கள் பட்ஜெட் உரை வாசித்தார். 


Jul 5, 2019 1:10 PM 

தங்கம் விலை உயரும் வகையில், பட்ஜெட்டில் வெளியானது அறிவிப்பு. இதுவரை 10 சதவீதமாக உள்ள தங்கத்தின் மீதான சுங்க வரி, இனி 12.5 சதவீதமாக அதிகரிப்பு. 


Jul 5, 2019 1:08 PM 

பெட்ரோல், டீசல் மீது செஸ் வரி அதிகரிப்பு. ரோடு, கட்டமைப்பு செஸ் என்ற பெயரில் 1 லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு தலா 1 ரூபாய் அதிகரிப்பு.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி கோஷம். 


 Jul 5, 2019 1:07 PM 

இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு 5 சதவீதம் கலால் வரி அதிகரிக்கப்படும். ராணுவ தளவாட பொருட்களுக்கு கலால் வரி கிடையாது. 


Jul 05,2019 1:06 PM

உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கிறது. எனவே ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மீது 1 ரூபாய் சுங்க வரி அதிகரிப்பு. இனி மீண்டும் பெட்ரோல் விலை உயரும்.


Jul 5, 2019 12:57 PM 

டிஜிட்டல் பணப் புழக்கம் ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. ரொக்கப் பணத்தின் மூலம் வணிகம் மேற்கொள்வதை குறைப்பதற்காக, ஆண்டுக்கு 1 கோடிக்கும் மேலாக ஒரு வங்கி கணக்கிலிருந்து பணம் எடுத்தால், TDS வரி 2 சதவீதம் விதிக்கப்படும். 


Jul 05,2019 12:57 PM

வங்கிக் கணக்கில் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஒரு ஆண்டில் பணம் எடுத்தால், எடுக்கும் பணத்துக்கு டிடிஎஸ் முறையில் 2% வரி பிடிக்கப்படும். 


Jul 5, 2019 12:54 PM 

வருமான வரி தாக்கல் செய்யும்போது பான் கார்டு இனி தேவையில்லை, ஆதார் எண்ணை வைத்தே வரி தாக்கல் செய்ய முடியும். வரி செலுத்துவதை எளிமையாக்க இந்த நடைமுறை கொண்டு வருகிறோம்


Jul 05,2019 12:57 PM

பான் எண்ணை குறிப்பிடவேண்டிய அனைத்து இடங்களிலும், அதற்கு பதிலாக ஆதார் எண்ணை குறிப்பிடலாம். 


Jul 05,2019 12:50 PM

நேரடி வரி வசூல் 78% அதிகரித்துள்ளது; வரி வசூல் 2013-14 ஆம் நிதியாண்டில் 6.38 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 2018 ஆண்டில் 11.37 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. 

தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மூலோபாய முதலீடு தொடர்ந்து முன்னுரிமையாக இருக்கும்; ஏர் இந்தியாவின் மூலோபாய முதலீடு மீண்டும் தொடங்கப்படும்; ரூ .1 லட்சம் 5 ஆயிரம் என்பது 2019-20 ஆம் ஆண்டுக்கான முதலீட்டு இலக்கு.


Jul 05,2019 12:46 PM

400 கோடி ரூபாய்க்கு கீழ் டேர்ன் ஓவர் கொண்ட நிறுவனங்கள் இனி வருமான வரியாக 25 சதவிகித வரி மட்டுமே செலுத்த வேண்டி இருக்கும். இது இந்தியாவின் 99.3 சதவிகித நிறுவனங்கள் வந்துவிடும்.


Jul 5, 2019 12:46 PM 

எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை அதிகரிக்க திட்டம். எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சிலை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களுக்காக வாங்கிய கடன் மீதான வட்டியில், 1.5 லட்சம் வரை வருமான வரியில் தள்ளுபடி பெறலாம். 


Jul 5, 2019 12:44 PM 

400 கோடி வரை ஆண்டு வருவாய் கொண்ட நிறுவனங்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும். எனவே, 99.3% நிறுவனங்கள் இந்த திட்டம் வரையறைக்குள் கொண்டு வந்துவிடும்


Jul 5, 2019 12:42 PM 

நேரடி வரி விதிப்பு 78 சதவீதம் அதிகரித்துள்ளது. 5 லட்சத்திற்கு மேலான ஆண்டு வருவாய் உள்ளவர்கள் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். 5 லட்சத்திற்கு கீழே வருவாய் கொண்டவர்களுக்கு வரி இல்லை. 


Jul 5, 2019 12:38 PM 

பிசிராந்தையாரை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் பேச்சு. யானை புகுந்த நிலம் என்ற அறிவுரையை பாண்டியன் அறிவுடை நம்பிக்கு வழங்கினார் பிசிராந்தையார். தவறான உச்சரிப்புடன் நிர்மலா சீதாராமன் செயுளை வாசித்ததால். 


Jul 5, 2019 12:34 PM 

பார்வையற்றவர்களும் அடையாளம் காணும் வகையில் 1, 2, 5, 10, 20 ரூபாய் நாணயங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விரைவில், பொது பயன்பாட்டுக்கு இவை கொண்டுவரப்படும்


Jul 5, 2019 | 12:30 PM 

பெண்கள் தொழில்முனைவோரை மேலும் ஊக்குவிப்பதற்காக, பெண்கள் சுய உதவி குழு (சுய உதவிக்குழு) வட்டி குறைப்பு திட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. 

'நாரி து நாராயணி' என்ற இந்தியப் பெண்களின் கவனத்தை ஈர்க்கிறேன். அதிக பெண்கள் பங்களிப்புடன் நாம் முன்னேற முடியும் என்று இந்த அரசு நம்புகிறது.


Jul 5, 2019 12:32 PM 

அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பிற்காக 100 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளோம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு. 


Jul 5, 2019 12:32 PM 

அரசு துறை வங்கிகளுக்கு மூலதன நிதியாக ரூ.70,000 கோடி வழங்கப்படும். வராக்கடன் குறைந்துள்ள நிலையில், வங்கிகளுக்கு ஊக்கம் அளிக்க நிதி ஒதுக்கீடு- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு


Jul 05,2019 12:23 PM

இந்தியாவில் பணப் புழக்கத்தை அதிகரிக்க, வங்கிகள் நிறைய கடன் கொடுக்க வேண்டும். எனவே இந்த நிதி ஆண்டில் மத்திய அரசு பொதுத் துறை வங்கிகளுக்கு 70,000 கோடி முதல் கொடுக்கப் போகிறார்கள்.

 


Jul 5, 2019 12:22 PM 

17 சுற்றுலா தலங்களை உலகத் தரத்திற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளோம். நமது பழங்குடியினர் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் வகையில் இவை அமையும். 


Jul 05,2019 12:21 PM

ஒரு சுய உதவிக் குழுவில் ஒரே ஒரு பெண் உறுப்பினர் இருந்தால் கூட, முத்ரா திட்டத்தின் கீழ் அந்த சுய உதவிக் குழுக்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.


Jul 5, 2019 12:17 PM 

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் இந்திய பாஸ்போர்ட்டுடன் ஆதார் அடையாள அட்டை வழங்கப்படும். அவர்கள் இந்தியா வரும்போது, 180 நாட்கள் காத்திருப்பு தினத்திற்கு முன்பாகவே இது வழங்கப்படும். 


Jul 5, 2019 12:17 PM

பெண்கள் சுய உதவிக்குழுவிற்கு முக்கியத்துவம் தரப்படும். அதிகபட்சமாக இந்த குழுக்கள் வாயிலாக தலா ரூ.1 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும். ஜன்தன் வங்கி கணக்கு மூலமாக இதைப் பெறலாம். 


Jul 5, 2019 12:12 PM 

பிரதான் மந்திரி கிராமீன் டிஜிட்டல் சக்ஸ்ரதா அபியான் திட்டத்தின்கீழ், 'பாரத் நெட்' என்ற பெயரில், நாட்டின் ஒவ்வொரு பஞ்சாயத்திலும், இன்டெர்நெட் இணைப்பை இலக்காகக் கொண்டுள்ளோம். 


Jul 05,2019 12:11 PM

உஜ்வால் திட்டத்தின் கீழ், இதுவரை 35 கோடி எல்இடி பல்புகளைக் கொடுத்திருக்கிறார்களாம். அதனால் இந்திய அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 18,000 கோடி ரூபாய் மிச்சமாகிறதாம்.

என்சைக்ளோபீடியா போன்று காந்தி பீடியா அறிமுகப்படுத்தப்பட்டு இளைஞர்களிடம் காந்திய கொள்கைகள் கொண்டு சேர்க்கப்படும்


Jul 5, 2019 12:05 PM 

புதிய தொழில்கள் துவங்குவோருக்காகவே தனி சாட்டிலைட் டிவி சேனல் துவங்கப்படும். இதில் தொழில் துவங்குவது, வரி உள்ளிட்ட பல விஷயங்கள் காண்பிக்கப்படும். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலமாகவே இந்த சேனல் நிகழ்ச்சிகள் தொகுக்கப்படும்.


Jul 5, 2019 12:01 PM 

புதிய தேசிய கல்வி கொள்கையை அரசு கொண்டு வர உள்ளது. உலகின் சிறந்த கல்வி முறையாக மாற்ற இந்த திட்டம். பள்ளி மற்றும் உயர் கல்வித்துறையில் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளோம். தேசிய ஆராய்ச்சி பவுண்டேஷன் மூலமாக, ஆய்வு கல்வி அதிகரிக்கப்படும். 

அனைத்து துறைகளிலும் உள்ள நிதி, இதற்கு பயன்படுத்தப்படும். உயர் கல்வி நிலையங்கள், புதிய கண்டுபிடிப்புகளின் தாய் வீடாக மாற்றப்படும். 400 கோடி ரூபாய், இதற்காக ஒதுக்கீடு. ஸ்டடி இன் இந்தியா என்ற திட்டம் கொண்டுவரப்பட்டு வெளிநாட்டு மாணவர்களை நமது கல்வி முறையை கற்றுத்தர ஊக்கப்படுத்துவோம். 


Jul 05,2019 11:59 AM

2019 - 20 நிதி ஆண்டுக்குள், 100 குழுக்கள் அமைக்கப்பட்டு இந்திய மூங்கில், தேன் காதி பொருட்கள் அனைத்தும் புரொமோட் செய்யப்படும். அதோடு இந்த 100 குழுக்கள் தனியார் நிறுவனங்கள், இந்திய விவசாயத் துறையில் முதலீடு செய்வதையும் ஊக்குவிக்கும்.


Jul 5, 2019 11:55 AM 

2024 ஆம் ஆண்டிற்குள் ஊரகப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க இலக்கு, இதற்காக, ஹர் கர் ஜல் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது


11:52 AM | 7/5/2019

இந்தியா ஒரு பெரிய விண்வெளி சக்தியாக உருவெடுத்துள்ளது. எங்கள் திறனை வணிக ரீதியாகப் பயன்படுத்த வேண்டிய நேரம் இது. இந்தியாவின் விண்வெளி திறனை வணிக ரீதியாகப் பயன்படுத்த, இஸ்ரோவின் நன்மைகளைத் தட்டிக் கேட்க பொதுத்துறை நிறுவனமான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) இணைக்கப்பட்டுள்ளது.


11:47 AM | 7/5/2019

பிரதான் மந்திரி கரம் யோகி மன் தன் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய் டேர்ன் ஓவர் பார்க்கும் 3 கோடி வியாபாரிகளுக்கு 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, ஓய்வூதியம் கொடுக்கப் போகிறார்களாம்.


11:50 AM | 7/5/2019

பாரம்பரிய தொழில்களை அதிக கிராம மக்கள் மேற்கொண்டு வருவதால், அதை மேம்படுத்த, நாடு முழுக்க, காதி, தேன், மூங்கில் கிளஸ்டர்கள் அமைக்கப்படும். 2019-20ம் ஆண்டில், 100 கிளஸ்டர்கள் நாடு முழுக்க அமைக்கப்படும். 1,25,000 கிலோ மீட்டர் தூர சாலைகள் மேம்படுத்தப்படும். இதற்காக ரூ.80,250 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது


Jul 5, 2019 11:41 AM 

1.95 கோடி வீடுகள் 2022 ஆம் ஆண்டுக்குள் ஏழைகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம், வீடற்றவர்கள் இல்லாத நிலை உருவாக்கப்படும்


11:34 AM | 7/5/2019

3 கோடி சில்லரை வணிகர்கள், கடை உரிமையாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் விரிவுபடுத்தப்படும். ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்குள் வர்த்தகம் செய்யும் வணிகர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். ஆதார் மற்றும் வங்கி கணக்கு மட்டுமே இதற்கு போதுமானது. இந்த திட்டத்திற்கு பிரதான் மந்த்ரி கரம் யோகி மான் தன் யோஜனா என பெயரிடப்பட்டுள்ளது.


10:57 PM - 4 Jul 2019

ரயில்வே உள்கட்டமைப்புக்கு 2018 முதல் 2030 வரை ரூ .50 லட்சம் கோடி முதலீடு தேவைப்படும். பிபிபி விரைவான வளர்ச்சியைக் கட்டியெழுப்பவும் பயணிகள் சரக்கு சேவைகளை வழங்கவும் பயன்படுத்தப்பட வேண்டும்.


10:55 PM - 4 Jul 2019

விரும்பத்தக்க திறன் கொண்ட தேசிய நெடுஞ்சாலை கட்டத்தை உருவாக்குவதை உறுதி செய்வதற்காக, தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் விரிவான மறுசீரமைப்பு செய்யப்படும். சரக்கு போக்குவரத்துக்கு ஆறுகளைப் பயன்படுத்துவதை அரசு எண்ணுகிறது, இது சாலைகள் மற்றும் ரயில்வேயையும் நீக்குகிறது.


10:48 PM - 4 Jul 2019

பரத்மாலா, திட்டம், சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளை உருவாக்க உதவும், சாகர்மாலா துறைமுக இணைப்பை மேம்படுத்தும். 


10:45 PM - 4 Jul 2019

இந்தியா இப்போது 6வது பெரிய பொருளாதார நாடு. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இது 11ஆவது இடத்தில் இருந்தது. 


10:43 PM - 4 Jul 2019

உணவு பாதுகாப்புக்காக கடந்த 5 ஆண்டுகளில் 2 மடங்கு பணம் செலவிடப்பட்டுள்ளது..!


11:13 AM 7/5/2019

"சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவை வெற்றிபெற முடியும் என்பதை நாங்கள் செய்து காட்டியுள்ளோம்": நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்


10:38 PM - 4 Jul 2019

நாங்கள் முதலில் பதவியேற்றபோது, இந்தியா, 1.8 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இருந்தது. சில வருடங்களில் அதை 2.7 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றினோம். இன்னும் சில வருடங்களில் 5 டிரில்லியன் டாலராக உயர்த்துவோம்.


10:22 PM - 4 Jul 2019

2019-20 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்கிறார் நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் 


9:58 PM - 4 Jul 2019

நாடாளுமன்றம் வந்தது நிதிநிலை அறிக்கை. பாதுகாப்புடன் நாடாளுமன்ற அவைகளுக்குள் எடுத்துச் செல்லப்படுகிறது!!


5 July 2019, 9:45 AM
பாரம்பரியத்தின் படி, மத்திய பட்ஜெட்டை முன்வைக்கும் முன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்க்கு அழைப்பு!!


5 July 2019, 9:24 AM

2019-20 மத்திய பட்ஜெட் தாக்கல் எதிரொலி இந்திய பகுச் சந்தையின் சென்செக்ஸ் 119.15 புள்ளிகள் அதிகரித்து 40,027.21 ஆக உயர்வு!


9:13 AM | July-07-2019

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மோஸ் நிதி அனுராக் தாக்கூர், நிதிச் செயலாளர் எஸ் சி கார்க், தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் மற்றும் நிதி அமைச்சகத்திற்கு வெளியே உள்ள மற்ற அதிகாரிகள். நாடே எதிர்பார்க்கும் மத்திய நிதிநிலை அறிக்கை காலை 11 மணிக்கு தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதியமைச்சகம் சென்றார். 


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சகத்தை வந்தடைந்தார். இவர் இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் 2019-20 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்!!


நரேந்திர மோடி தலைமையிலான NDA அரசாங்கத்தின் இரண்டாவது பதவிக் காலத்தின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்!

பிரதமர் மோடி தலைமையில் 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள புதிய அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார். 

கடந்த பிப்ரவரி மாதம் மோடி தலைமையிலான அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து தேர்தலை சந்தித்தது. தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று புதிய அரசு அமைக்கப்பட்டதையடுத்து, 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான முழு அளவிலான பட்ஜெட் இன்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்திரா காந்திக்கு அடுத்து, பட்ஜெட்டை தாக்கல் செய்யும் இரண்டாவது பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவார்.

பட்ஜெட்டை இறுதி செய்யும் பணிகள் குறித்து ஆலோசிக்க நேற்று மாலை அரசு நிதித்துறை அதிகாரிகள் மற்றும் பொருளாதார வல்லுனர்களை நிர்மலா சீதாராமன் சந்தித்தார். இணையமைச்சர் அனுராக்சிங் தாகூரும் அப்போது உடன் இருந்தார். அவர் இன்று தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெற்ற அம்சங்கள் அப்படியே இடம் பெறும் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் நிதியுதவி, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மூன்றாயிரம் ஓய்வூதியத் தொகை, போன்ற முக்கிய அம்சங்கள் இந்த பட்ஜெட்டிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருமான வரி செலுத்துவோருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் உச்சவரம்பில் மாற்றம் செய்யாமல், 5 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்த வேண்டியதில்லை, ஆனால் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதுவும் இந்த முழு பட்ஜெட்டில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது தவிர முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலும் வரி சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், வேலைவாய்ப்புக்கான திட்டங்களை செயல்படுத்தவும், பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வெளியாகலாம். பாரத் ஆயுஷ்மான் போன்ற பிரதமர் மோடியின் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் புதிய உத்வேகம் கிடைக்கலாம், என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில் பயணிகளின் பாதுகாப்பு, ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட வாய்ப்பில்லை என்றும் புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியாகாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

Trending News