Cabinet Meeting: பல்வேறு துறைகளில் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்

மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார். இதில், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பெரிய முடிவுகள் குறித்து அவர் கூறினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 14, 2021, 05:41 PM IST
  • அமைச்சரவை விரிவாக்கத்திற்குப் பிறகு அமைச்சரவையின் இரண்டாவது கூட்டம் இன்று நடந்தது.
  • பல முக்கிய முடிவுகள் இன்று எடுக்கபட்டுள்ளன.
  • டிஏ 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது
Cabinet Meeting: பல்வேறு துறைகளில் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் title=

இன்று பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த சந்திப்பு பல வழிகளில் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, இயல்பான பல நடவடிக்கைகள் முடங்கி இருந்த நிலையில், சுமார் ஒரு வருடம் கழித்து, பிரதமர் நரேந்திர மோடி மெய்நிகர் சந்திப்பு இல்லாமல், இன்று நேரடியான சந்திப்பை மேற்கொண்டார். அமைச்சரவை விரிவாக்கத்திற்குப் பிறகு அமைச்சரவையின் இரண்டாவது கூட்டமாகும் இது.

கூட்டத்திற்குப் பிறகு, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார். இதில், மத்திய அமைச்சரவைக் (Central Cabinet) கூட்டத்தில் எடுக்கப்பட்ட பெரிய முடிவுகள் குறித்து அவர் கூறினார். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன என்பதை இங்கே காணலாம்:

1. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலனுக்கான பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது

- டிஏ (Dearness Allowance) 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

- இது ஜூலை 1, 2021 தேதியிலிருந்து அமலுக்கு வரும். 

- கோவிட் காரணமாக அகவிலைபப்டி முடக்கப்பட்டிருந்தது. மூன்று தவணைகளும் சேர்த்து இனி வழங்கப்படும். 

- இந்த முடிவு 48.34 லட்சம் ஊழியர்களுக்கும் 65.26 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும்.

2.ஜவுளித் தொழிலுக்கான பெரிய முடிவு

ஜவுளித் துறையில் ROICTL திட்டத்தை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ஏற்றுமதியை அதிகரிக்கும். இந்த துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். இதனால் நாட்டின் நிறுவனங்கள் உலக அளவில் போட்டியிட முடியும். வரி தள்ளுபடியை 20 மார்ச் 2024 வரை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2021 முதல் இது நடைமுறைக்கு வரும்.

ALSO READ: 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி, 28% டி.ஏ-வுக்கு ஒப்புதல்

3. கிராமப்புற இந்தியா மீது கவனம்: கால்நடை பராமரிப்பு மேம்பாட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது

அரசாங்கத்தின் இந்த முடிவு நாட்டின் விவசாயிகளுக்கும் கால்நடை பராமரிப்பாளர்களுக்கும் பயனளிக்கும். இந்தத் துறையில் 9800 கோடி ரூபாயை மத்திய அரசு முதலீடு செய்யும். கால்நடை வளர்ப்பு துறையில் ரூ .54,618 கோடி முதலீடு செய்யப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 3 திட்டங்களை உள்ளடக்கியது:

- கால்நடை மேம்பாட்டுத் திட்டம்: நவீன தொழில்நுட்பத்தின் பயன், கால்நடை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, நோய் கட்டுப்பாட்டு திட்டம்

- விலங்குகளுக்கான ஆம்புலன்ஸ் சேவை: மனிதர்களைப் போல நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை

- உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி: கால்நடை விவசாயிகளுக்கு இதன் மூலம் நேரடி நன்மை கிடைக்கும்.

4. ஆயுஷ் திட்டத்துக்கு ரூ .4,607 ஒதுக்கீடு 

கொரோனா காலத்தில் ஆயுஷ் அமைச்சகம் ஒரு முக்கிய பங்ககைக் கொண்டுள்ளது. தேசிய ஆயுஷ் திட்டத்தை 2021-22-லிருந்து 2025-26 வரை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ் 5 ஆண்டுகளில் ரூ .4,607 செலவிடப்படும். இதன் கீழ், நோய்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படும். மக்கள் மத்தியில் இது குறித்த பிரச்சாரம் செய்யப்படும்.

- நாடு முழுவதும் 12000 ஆயுஷ் சுகாதார நல மையங்கள் திறக்கப்படும்.

- 6 ஆயுஷ் கல்லூரிகள் திறக்கப்படும்.

- 12 முதுகலை கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும்.

- 10 இளங்கலை நிறுவனங்களின் உள்கட்டமைப்பு அபிவிருத்தி செய்யப்படும்.

- 50 படுக்கைகள் மற்றும் 30 படுக்கைகள் கொண்ட 36 புதிய மருத்துவமனைகள் கட்டப்படும்.

- தற்போது, ​​உள்ள மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு அபிவிருத்தி செய்யப்படும்.

- 43 ஆயுஷ் (Ayush) மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும்.

- அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஆயுஷ் அமைச்சின் நிறுவனம் வடகிழக்கு ஆயுர்வேத மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாக செயல்படும்.

5. கப்பல் துறையில் பெரிய முடிவுகள், ஏற்றுமதி அதிகரிக்கும்

கப்பல் துறை குறித்து கப்பல் அமைச்சகம் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். இத்தகைய சூழ்நிலையில், கப்பல் துறையில் அமைச்சரவை ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது.

- கப்பல் துறைக்கு மானியத் திட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

- உலகளாவிய டெண்டரில் மானியம் வழங்குவதற்கான திட்டம் இருந்தது, அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

- இது மற்ற நாடுகளில் பதிவுசெய்து வணிகம் செய்வதை எளிதாக்கும்.

ALSO READ: PMGKAY: இலவச உணவுத் திட்டத்தில் 15 லட்சம் டன் உணவு தானியங்கள் விநியோகம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News