LPG Subsidy : எல்பிஜி சிலிண்டர்கள் வாங்கும் போது, அரசாங்கத்திடமிருந்து மானியம் கிடைக்கிறது. கடந்த மாதம் ஜூலை மாதத்தில் எல்பிஜி சிலிண்டர் விலை அதிகரித்தது. அத்தகைய சூழ்நிலையில், மானியம் உள்ளதன் காரணமாக, சிலிண்டர் விலை ஏற்றத்திலிருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கிறது என்பதில் மாற்று கருத்து இல்லை.
உங்கள் வங்கிக் கணக்கில் எல்பிஜி மானியம் வந்து விட்டதா என்பதை வீட்டில் இருந்த படியே அறிந்து கொள்ளலாம். மானியம் வந்து விட்டதா என்பதை அறியும் வழி:
1. முதலில் www.mylpg.in இணையதளத்திற்கு செல்லவும்.
2. வலைதளத்தில் வலது பக்கத்தில் மூன்று நிறுவனங்களின் எரிவாயு சிலிண்டர்களின் புகைப்படத்தைக் காண்பீர்கள்
3. அதில், உங்கள் எரிவாயு சிலிண்டர் வழங்கும் நிறுவனத்தின் புகைப்படத்தின் மீது கிளிக் செய்யவும்
4. அதில் ஒரு புகைப்படம் திறக்கும், அதில் உங்கள் எரிவாயு சேவை வழங்குநரின் தகவல் இருக்கும்
5. மேல் வலதுபுறத்தில் லாக்இன் மற்றும் புதிய பயனர் ஆப்ஷன் இருக்கும், அதைத் தேர்ந்தெடுக்கவும்.
ALSO READ | Free LPG Scheme: மத்திய அரசின் இலவச சிலிண்டர் திட்டம் பெறுவது எப்படி?
6. உங்கள் ஐடி ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்தால் நீங்கள் லாக்இன் வேண்டும்
7. ஐடி இல்லையென்றால் நீங்கள் ந்யூ யூஸரை தேர்ந்தெடுக்க வேண்டும்
8. இதற்குப் பிறகு, திறக்கும் புதிய திரையில், வலது பக்கத்தில் சிலிண்டர் முன்பதிவு ஹிஸ்ட்ரியை தேர்ந்தெடுக்கவும்
9. உங்கள் மானியம் கிடைத்ததா இல்லையா என்பதை அறியலாம்
10. மானியம் கிடைக்காத நிலையில், 18002333555 கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் செய்யலாம்
மானியம் நிறுத்தப்படுவதற்கான காரணம்
பலருக்கு எல்பிஜி சிலிண்டர்களுக்குகான மானியத்தை அரசு வழங்குவதில்லை. இதற்கு உங்கள் ஆதார் எண் இணைக்கப்படாதது காரணமாக இருக்கலாம். இரண்டாவது விஷயம் என்னவென்றால், வருடாந்திர வருமானம் 10 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் உள்ளவர்களுக்கு, அரசு சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை கொடுப்பதில்லை. அதாவது உங்கள் குடுமப்த்தின் மொத்த ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கு மேல் இருந்தால் மானியம் கிடைக்காது.
ALSO READ | LPG Booking: சிலிண்டரை புக் செய்யும் ஸ்மார்ட்டான வழிகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR