உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் 35 வயது மதிக்கத்தக்க கடைக்காரர் ஒருவரை 18 வயது இளம்பெண் 'Uncle' என்று அழைத்ததால், அவரை கடைக்காரர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக நமக்கு உறவினர் அல்லாமல் ஊரில் தெரிந்தவர்களை அண்ணா, அக்கா, மாமா, அத்தை என்று உறவுமுறை சொல்லி கூப்பிடுவது வழக்கமான ஒன்று. ஆனால் அவரு ஒரு இளம்பெண் உறவுமுறை சொல்லி கூப்பிட்டதால், கடைக்காரர் செய்த கொடூர செயல் தற்போது அம்பலமாகியுள்ளது.
ALSO READ | பள்ளி, மால், சினிமா ஹால் செயல்படாது.. கடும் கட்டுப்பாடுகள் விதித்த மாநில அரசு
உதம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள சிதர்கஞ்ச் நகரின், காதிமா சாலையில் நீண்ட நாட்களாக ரோஹித்குமார் என்பவர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமையன்று அப்பகுதியை சேர்ந்த நிஷா அஹமது என்கிற 18 வயது பெண் ஒருவர் பேட்மிண்டன் ராக்கெட்டை மாற்றுவதற்காக சென்றுள்ளார். அப்போது கடை உரிமையாளர் ரோஹித்குமாரை, நிஷா 'Uncle' என்று அழைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரோஹித்குமார், தன்னையா 'Uncle' என்று அழைக்கிறார் என்று அந்த பெண்ணை கொடூரமாக தாக்கியத்தில் அந்த பெண்ணின் தலையில் காயம் ஏற்பட்டது. இந்த எதிர்பாராத தாக்குதலில் அப்பெண் நிலைகுலைந்து கீழே சரிந்தார். அதனையடுத்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து அந்த பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பிரிவு 354 படி ஒரு பெண்ணின் அடக்கத்தை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல், பிரிவு 323 படி தன்னிச்சையாக காயப்படுத்துதல் மற்றும் பிரிவி 506 படி குற்றம் சார்ந்த மிரட்டல் ஆகிய பிரிவுகளின் மேல் அந்த கடைக்காரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ALSO READ | பள்ளிகளுக்கு டிசம்பர் 31 முதல் ஜனவரி 14 வரை விடுமுறை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR