நிலவில் விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க முடியவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்!!
நிலவின் தென்பகுதியில் சந்திரயான் விண்கலனை தரை இறக்கி உலக சாதனை நிகழ்த்தவிருந்தது இந்தியா. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து ஜூலை 22 ஆம் தேதி GSLV மார்க் 3 ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் சரியான பாதையில் விண்ணில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது. கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலை சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தரையிறங்குவதாக இருந்தது.
ஆனால், நிலவிலிருந்து 2.1 KM தொலையில் விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் சந்திரயான் 2 விண்கலத்தை நிலவில் நிலை நிறுத்தும் இஸ்ரோவின் திட்டம் பின்னடைவைச் சந்தித்தது. ஆனாலும், தங்களின் முயற்சியை கைவிடாமல் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், நேற்றுடன் விக்ரம் லேண்டரின் ஆயுள்காலம் முடிவடையும் நிலையில், இஸ்ரோ லேண்டரை கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் செயல்பட்டு வந்தது. ஆனாலும், நிலவில் விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க முடியவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
ISRO Chief K Sivan: Chandrayaan-2 orbiter is doing very well. There are 8 instruments in the orbiter & each instrument is doing exactly what it meant to do.Regarding the lander, we have not been able to establish communication with it. Our next priority is Gaganyaan mission. pic.twitter.com/eHaWL6e5W1
— ANI (@ANI) September 21, 2019
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில்; எங்களால் நிலவில் விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க முடியவில்லை. சந்திரயான் 2 ஆர்பிட்டர் மிகச்சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. ஆர்பிட்டரில் மொத்தம் 8 கருவிகள் உள்ளன, எட்டு கருவிகளும் அது செய்ய வேண்டியதை மிகச்சிறப்பாக செய்து வருகிறது. எங்கள் அடுத்த முன்னுரிமை ககன்யான் பணி" என அவர் தெரிவித்தார்.