விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடத்தப்பட்ட முந்தைய பேச்சுவார்த்தைகளில் தீர்வு ஏதும் ஏற்படாததால் சனிக்கிழமை (டிசம்பர் 5, 2020) விவசாயிகள் சங்கத் தலைவர்களுடன் ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது ஆனால், இதிலும் தீர்வு ஏதும் எட்டப்படவில்லை. அடுத்த பேச்சு வார்த்தை டிசம்பர் 9ம் தேதி நடைபெறும்.
இன்றைய பேச்சுவார்த்தை மதியம் 2 மணிக்கு தில்லியின் விக்யான் பவனில் தொடங்கியது.
'டில்லி சாலோ' என்னும் விவசாயிகள் போராட்டத்தின் (Farmers Protest) ஒரு பகுதியாக, விவசாயிகள் தற்போது தேசிய தலைநகரான தில்லியின் எல்லை பகுதிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் வெள்ளிக்கிழமை பத்தாவது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
நாடாளுமன்றத்தில் (Parliament) தாக்கல் செய்யப்பட்ட மூன்று பண்ணை மசோதாக்களுக்கும் (Farm Bill) குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் (Ram Nath Kovind) சென்ற செப்டெம்பர் மாதம் 27ம் தேதி ஒப்புதல் அளித்தார்.
ஒரு கெஸெட் அறிவிப்பின்படி, உழவர் உற்பத்தி, வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா, 2020, விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்திரவாதம் மற்றும் வேளான் சேவைகள் மசோதா, 2020, மற்றும் அத்தியாவசிய பொருட்கள் (திருத்த) மசோதா 2020 ஆகிய மூன்று மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் (Ram Nath Kovind) ஒப்புதலை அளித்ததை அடுத்து, அவை சட்டமாக்கப்பட்டன.
இதை அடுத்து, பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் விவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்பைக் காட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | விவசாயிகள் போராட்டம் மக்களுக்கு பெரும் இடைஞ்சல்.. உச்சநீதிமன்றத்தில் வழக்கு..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR