பத்மாவத் திரைப்படத்திற்கான தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
பத்மாவத் என்னும் பத்மாவதி திரைப்படத்தினை திரையிட எழுந்த தடைகளை எதிர்த்து, படத்தின் தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் நேற்று மனு அளித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்தியபிரதேஷ், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜாராத் மாநிலத்தில் பத்மாவத் படத்தை திரையிட எந்த தடையும் இல்லை என அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்படும் பத்மாவதி எனும் ''பத்மாவத்'' திரைப்படம் வரும் ஜன.,25-ஆம் நாள் நாடுமுழுவதும் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது. சித்தூர் ராணி பத்மினியின் கதையினை இந்தியில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் சினிமாவாக படமாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தினை பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சால் இயக்க, நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்துள்ளார். இப்படத்தில் சித்தூர் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக ராஜஸ்தான், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தில் வசிக்கும் ராஜ புத்திர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இத்திரைப்படம் குறித்து தொடர்ந்து பல சர்சைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், இப்படத்திற்கு U/A சான்றிதழினை டெல்லி திரைப்பட தனிக்கை குழு அளித்தது. இதனையடுத்து இப்படம் வரும் ஜனவரி 25-ஆம் நாள் 'பத்மாவத்' என்ற பெயரில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இப்படத்தினை மத்தியபிரதேஷ், ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஹரியானாவில் திரையிட அம்மாநிலம் தடை விதிப்பதாக அறிவித்தது. இதனையடுத்து இப்படத்திற்கு தடை விதித்ததினை எதிர்த்து, படத்தின் தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் நேற்று மனு அளித்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்தியபிரதேஷ், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜாராத் மாநிலத்தில் பத்மாவத் படத்தை திரையிட எந்த தடையும் இல்லை என அறிவித்துள்ளது.
Supreme Court stays notification by Madhya Pradesh, Haryana, Rajasthan and Gujarat, grants green signal to release of the film #Padmaavat. pic.twitter.com/Aqsi4x9meX
— ANI (@ANI) January 18, 2018