பசுவை தேசிய விலங்குகாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. பசு பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம் என்றும், பசு பாதுகாப்பில் அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் அமந்த மனுவில் குறிப்பிடுப்பட்டிருந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்கே கௌல், அபாய் எஸ் ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுத்தனர். மேலும், நீதிமன்றம் மனுதாரரிடம்,"இதுதான் நீதிமன்றத்தின் வேலையா?, இதுபோன்ற வழக்குகளை தொடர்ந்து ஏன் செலவுகளை அதிகப்படுத்துகிறீர்கள், எந்த அடிப்படை உரிமை இங்கு மீறப்பட்டிருக்கிறது?, நீங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துவிட்டால், நாங்கள் சட்டத்தை காற்றில் பறக்கவிட வேண்டுமா" என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர்.
மேலும் படிக்க | RIP: சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் காலமானார்
மனுதாரர் தரப்பு வழக்கறிஞரை, நீதிபதிகள் எச்சரித்ததை அடுத்து வழக்கு வாபஸ் பெறுவதாக கூறினார். வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். பசுவை தேசிய விலங்காக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) கோவன்ஷ் சேவா சதன் மற்றும் பலர் இந்த பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தது.
முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம், பசு வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முஸ்லீம் நபருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கின் போது, பசுப் பாதுகாப்பை இந்துக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக்கி, அதை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றம் கூறியுள்ளது.பசுக்கள் இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கம் என்றும், அதன் பாதுகாப்புக்கு ஏற்ற சட்டங்களை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Domestic Violence: குடும்ப வன்முறையால் 36 ஆண்டுகள் சங்கிலிச் சிறையில் அடைபட்ட பெண்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ