ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜேரி மாவட்டம் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் உயிரிழந்துள்ளார்!
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த 15 ஆண்டுகால வரலாற்றில் மிக அதிகமான அளவில் கடந்த 2018-ஆம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் படைகள் 2936 முறை எல்லையோரத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
J&K: Army rifleman 24 year old Yash Paul lost his life in ceasefire violation by Pakistan in Sunderbani sector earlier today pic.twitter.com/7kY8FBrhCU
— ANI (@ANI) March 21, 2019
அந்த வகையில், கடந்த திங்கட்கிழமை ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், இன்றும் இதே ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள சுந்தர்பானி செக்டார் பகுதியில் உள்ள கெரி என்ற இடத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் இந்திய வீரர் உயிரிழந்துள்ளார்.
இந்தாண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இன்று வரை பாகிஸ்தான் ராணுவம் 110 முறை இந்திய நிலைகளின்மீது தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.