நியூடெல்லி: லிவ்-இன் பார்ட்னர்ஷிப்களை உள்ளடக்கும் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இல்லாததால், பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை போன்ற பெரிய குற்றங்கள் உட்பட, லிவ்-இன் பார்ட்னர்களால் செய்யப்படும் குற்றங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மம்தா ராணி vs மத்திய அரசு என்ற வழக்கில், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள், அதை சட்டப் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியா
வழக்கறிஞர் மம்தா ராணி தாக்கல் செய்துள்ள இந்த பொதுநலன் மனுவில், லிவ்-இன் உறவுகளில் இருப்பவர்களுக்கு சமூக சமத்துவம் மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் உட்பட, நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்காக நீதிமன்றங்கள் எப்போதும் பணியாற்றி வருவதாகவும், பெண்கள், ஆண்கள் அல்லது குழந்தைகள் என லிவ்-இன் உறவில் இருப்பவர்களைப் பாதுகாக்கும் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய உறவுகளிலினால் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் மம்தா ராணி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் படிக்க: மனீஷ் சிசோடியா ஒரு ரூபாய் ஊழல் செய்ததாக கூட பாஜகவால் நிரூபிக்கமுடியாது: AAP சவால்
"மாண்புமிகு உச்ச நீதிமன்றம் தொடர்ந்து திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒன்றாக வாழும் மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வந்துள்ளது.அது பெண்கள், ஆண்கள் அல்லது அத்தகைய உறவில் இருந்து பிறந்த குழந்தைகளுக்கும் நன்மையாக இருந்துள்ளது" என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
லிவ்-இன் உறவுகளை பதிவு செய்யத் தவறுவதால், சுதந்திரமாக வாழ்வதற்கான அரசியலமைப்பு உரிமைகளையும் (பிரிவு 19) மற்றும் உயிரைப் பாதுகாக்கும் உரிமையையும் (பிரிவு 21) மற்றும் தனிப்பட்ட சுதந்திரமும் பாதிக்கப்படுவதாக மனுதாரர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் படிக்க: இந்தியாவால் துன்புறுத்தப்பட்ட நித்யானந்தா? ஐநா-வில் கைலாசா சொன்னது என்ன?
லிவ்-இன் உறவுகளை நிர்வகிப்பதற்கான சட்டங்களை உருவாக்கவும், திருமணம் செய்யாமல் வாழும் உறவுகளில் உள்ளவர்களின் சரியான எண்ணிக்கையைக் கண்டறிய மத்திய அரசு ஒரு தரவுத்தளத்தை உருவாக்குவதற்கான அவசரத் தேவையையும் மனு வலியுறுத்துகிறது.
லிவ்-இன் பார்ட்னர்ஷிப்களை பதிவு செய்வதை கட்டாயமாக்குவதன் மூலம் மட்டுமே இதை அடைய முடியும் என்று மனுதாரர் வாதிட்டார். லிவ்-இன் பார்ட்னர்ஷிப்களை உள்ளடக்கும் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இல்லாததால், பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை போன்ற பெரிய குற்றங்கள் உட்பட பல பெரிய அளவிலான குற்றங்கள், லிவ்-இன் பார்ட்னர்களால் செய்யப்படுவதாக மனுதாரர் கவலை தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ