இந்திய பொருளாதார நிலை பற்றி மோடிக்கு துளியும் கவலை இல்லை: சோனியா காந்தி!

நாட்டின் பொருளாதார நிலைமை பற்றி அக்கறையே இல்லாமல் பிரதமர் மோடி இருப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக தாக்கியுள்ளார்..!

Last Updated : Nov 3, 2019, 11:32 AM IST
இந்திய பொருளாதார நிலை பற்றி மோடிக்கு துளியும் கவலை இல்லை: சோனியா காந்தி! title=

நாட்டின் பொருளாதார நிலைமை பற்றி அக்கறையே இல்லாமல் பிரதமர் மோடி இருப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக தாக்கியுள்ளார்..!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் நபர்கள் மீதான "ஸ்னூப்பிங்" சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டுள்ளார். அதற்காக, பயன்படுத்தப்பட்ட இஸ்ரேலிய மென்பொருகளை மோடி அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்; தாய்லாந்து மாநாட்டின் போது பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்தாகும் வர்த்தக ஒப்பந்தங்கள், விவசாயிகள், சிறுவியாபாரிகள், சிறிய தொழில் நிறுவனங்கள் மீது சுமையாக அழுத்தும் என்றும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவின் பொருளாதாரம் இப்படியொரு முடக்கத்தில் இருப்பதை மிகுந்த வலியுடன் உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டார். பொருளாதார மந்த நிலைமை குறித்த தகவல்களை அரசு செவிசாய்க்காமல் மறுப்பதிலேயே குறியாய் இருப்பது வருத்தத்தை மேலும் அதிகரிப்பதாக சோனியா தெரிவித்தார்.

இதனிடையே சோனியாவின் விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், 2011-12 ஆம் ஆண்டுகளில் ஆசியான் நாடுகளுக்கு இந்தியாவின் சந்தையை 74 சதவீதம் திறக்கும் ஒப்பந்தமும், 2007 ஆம் ஆண்டு இந்தியா-சீனா சுதந்திர வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தானபோது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முடிவை ஏன் சோனியா எதிர்க்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

திடீரென விழித்தெழுந்து தாய்லாந்தில் நடைபெறும் வர்த்தக ஒப்பந்தம் குறித்து கருத்துத் தெரிவிப்பதா என்றும் சோனியாவிற்கு பியூஷ் கோயல் கண்டனம் தெரிவித்துள்ளார். 

 

Trending News