ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்ஹேபாரா பகுதியில் பாதுகாப்பு படையினருடன் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்!
சம்பவ இடத்திலிருந்து ஆயுதம், வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைப்பெற்று வருகின்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குல்கம் மாவட்டத்தில் உள்ள இராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் வியாழக்கிழமை (நேற்று) தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை தொடர்ந்து இன்று துப்பாக்கிச் சண்டை நடைப்பெற்று வருகின்றது.
#JammuAndKashmir: Six terrorists have been killed in the encounter which started this morning in Sekipora area of Bijbehara in Anantnag district. Arms and ammunition have recovered. Operation is underway. (visuals deferred by unspecified time) pic.twitter.com/i4nywaW3fm
— ANI (@ANI) November 23, 2018
முன்னதாக கடந்த நவம்பர் 18-ஆம் நாள் ஷாப்பியன் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன், ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு - காஷ்மீர் காவல்துறையினருடன் பாதுகாப்புப் படைகள் கூட்டாக நடத்திய இந்த தேடுதல் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் இருப்பினை கண்டறிந்துள்ளனர். நம்பிக்கைக்குறிய வட்டாரங்களில் இருந்து பெறப்பட்ட தகவலின் பேரில் ஷாப்பியன் மாவட்டம் ஜெய்னாபூர் பகுதியில் இந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
கடந்த வாரம் இப்பகுதியை சேர்ந்த 3 இளைஞர்களை கடத்திச் சென்ற பயங்கரவாதிகள், கடத்தப்பட்ட நபர்களில் இருவரை கொடூரமாக கொலை செய்து அதை வீடியோவாக வெளியிட்டனர். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.