இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டர் செய்யப்பட்ட பிரஷர் குக்கர் ஒன்று சமீபத்தில் வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்துள்ளார் பயனர் ஒருவர். அக்டோபர் 1, 2022 அன்று தனது வீட்டிற்கு பிரஷர் குக்கர் ஒன்றை அமேசான் தளத்தில் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அப்போதே சில காரணங்களால் அதனை ரத்து செய்துள்ளார். இந்நிலையில் சரியாக 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்ட் 28, 2024 அன்று பிரஷர் குக்கர் அவரது வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இந்த வினோத செயலை கண்டு அதிர்ந்த ஜே என்ற பயனர் ஒருவர் அவரது X தளத்தில், இது குறித்து பதிவு செய்துள்ளார். ''2 ஆண்டுகளுக்குப் பிறகு எனது ஆர்டரை டெலிவரி செய்ததற்கு நன்றி அமேசான். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு எனது வீட்டு சமையல்காரர் தற்போது உற்சாகமாக இருக்கிறார், அது மிகவும் சிறப்பான பிரஷர் குக்கராக இருக்க வேண்டும்!'' என்று ட்வீட் செய்துள்ளார்.
அக்டோபர் 1, 2022 அன்று ஆர்டர் செய்யப்பட்ட பிரஷர் குக்கர் ஆகஸ்ட் 28, 2024 அன்று டெலிவரி செய்யப்பட்டுள்ளதால் இவ்வாறு பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் வைரலானதை தொடர்ந்து பலரும் அமேசான் நிறுவனத்தை கலாய்த்து வருகின்றனர். இந்த ட்வீட்டில் பலரும் கமெண்ட்டும் செய்து வருகின்றனர். "இது செவ்வாய் கிரகத்தில் இருந்து பெறப்பட்டது" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். ''மிகவும் திறமையான கைவினைஞர்களால் செய்யப்பட்ட குக்கராக இருக்க வேண்டும்'' என்றும், ''உங்களின் ஆர்டருக்காக சிறப்பாக செய்யப்பட்ட குக்கர் இது. எனவே நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும்" என்றும், "உங்கள் ஆர்டர் இணைய பிரபஞ்சத்தில் இருந்து வருகிறது என்று நினைக்கிறேன், அதனால் நீங்கள் இதனை பெற 2 ஆண்டுகள் ஆனது" என்று பத்திவிட்டுள்ளனர்.
Thank you Amazon for delivering my order after 2 years.
The cook is elated after the prolonged wait, must be a very special pressure cooker! pic.twitter.com/TA8fszlvKK
— Jay (@thetrickytrade) August 29, 2024
மற்றொருவர் ''இது மிகவும் மதிப்புமிக்க குக்கர், ரொம்ப ரேர் பீஸ். நீங்கள் அதை பெற்றதற்கு அதிர்ஷ்டசாலி. நானும் இதே போன்ற ஒன்றை பெற காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். பலர் தங்களுக்கும் இதேபோல தாமதமான டெலிவரியானது பற்றி தங்கள் சொந்த கதைகளை பகிர்ந்து கொண்டனர். இந்த ட்வீட் வைரலானதை தொடர்ந்து பதிலளித்து இருந்த அமேசான் நிறுவனம், ''வணக்கம், இது போன்ற ஒரு சம்பவம் ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறோம். தயவுசெய்து இதன் முழு விவரத்தை எங்களிடம் தெரிவிக்கவும்'' என்று கூறி இருந்தது. அதற்கு ஜெய், ''என்ன தெரிவிப்பது? 2022ல் ஆர்டர் செய்தேன், அப்போதே அதனை வேண்டாம் என்று கேன்சல் செய்துவிட்டேன். இப்போது டெலிவரி செய்யப்பட்டால் எப்படி பணம் செலுத்த முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க | ஓநாய்களின் கொடூர தாக்குதல்... 8 சிறார்கள், 1 பெண் பலி - அச்சமூட்டும் பகீர் சம்பவம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ