15 வயது மாணவனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை - மரண வாக்குமூலத்தில் பகீர்!

Crime News: 15 வயது மாணவனை மூன்று பேர் சேர்ந்த கும்பல் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த நிலையில், போலீசார் அந்த மாணவனிடம் பெற்ற மரண வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jun 16, 2023, 08:44 PM IST
  • டியூஷனுக்குச் சென்றபோது மாணவன் மீது தாக்குதல் நடந்துள்ளது.
  • போக்சோ உள்பட 2 வழக்குப்பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
15 வயது மாணவனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை - மரண வாக்குமூலத்தில் பகீர்! title=

Crime News: ஆந்திரா மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் அடையாளம் தெரியாத சிலரால் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் 15 வயதான அமர்நாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் டியூஷனுக்குச் சென்று கொண்டிருந்தபோது, தாக்குதல் நடத்தியவர்கள் பெட்ரோலை ஊற்றி தீவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, படுகாயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் குண்டூரில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் செருகுபள்ளி மண்டல் தொகுதி ராஜவோலு கிராமத்தில் இன்று காலை நடந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் சைக்கிளில் டியூஷன் சென்று கொண்டிருந்தபோது, ரெட்லப்பாலம் அருகே சில இளைஞர்கள் அவரை தடுத்து நிறுத்தினர் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | Manipur: மீண்டும் பெட்ரோல் குண்டுவீச்சு! 20 நாட்களில் 4 அமைச்சர்கள்-எம்எல்ஏக்கள் வீட்டுக்கு தீ வைப்பு

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்து குண்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வெங்கடேஷ்வர் ரெட்டியும் இன்னும் இரண்டு பேரும் சேர்ந்து தன்னை தீ வைத்து எரித்ததாக அந்த சிறுவன் போலீசாரிடம் மரண வாக்குமூலம் அளித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது

இதற்கிடையில், அமர்நாத்தின் தாத்தா ரெட்டையா, அமர்நாத்தின் சகோதரிக்கு தொல்லை கொடுத்த 21 வயதான வெங்கடேஷ்வர் ரெட்டி தான் தனது பேரன் கொலைக்குக் காரணம் என்று கூறினார். அமர்நாத் தனது சகோதரியை தொல்லை கொடுத்த அந்த வாலிபரிடம் வாக்குவாதம் நடத்தியுள்ளார். அவர் தனது சகோதரி படிக்கும் கல்லூரியில் சுற்றித் திரிந்த வெங்கடேஷ்வரை அமர்நாத் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

ஆந்திராவின் பாபட்லா போலீஸ் அதிகாரி வகுல் ஜிண்டால், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். வெங்கடேஷ்வரால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் கொலை செய்யப்பட்ட அமர்நாத்தின் சகோதரி மைனர் என்பதால் கடுமையான போக்சோ சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். 

மேலும் படிக்க | கொரொனாவுக்கு எண்ட் கார்டு போடுவது எப்போது? சுகாதார அமைச்சகத்தின் கொரோனா அப்டேட்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News