Indian Railways: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி, அதிகரிக்கிறதா கட்டணம்?

Indian Railways Fare: கோவிட்-19க்கு முன் மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகையை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து மக்களவையில் ரயில்வே அமைச்சரிடம் கேள்வி கேட்கப்பட்டது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 14, 2022, 04:06 PM IST
  • ரயில்வே அமைச்சர் பெரிய அறிக்கை.
  • ரயில்வே பயணிகளுக்கு அதிர்ச்சி.
  • ரயில் கட்டணம் அதிகரிக்குமா.
Indian Railways: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி, அதிகரிக்கிறதா கட்டணம்? title=

இந்திய ரயில்வே கட்டணம்: நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால், இந்த செய்தியைக் கேட்டதும் நீங்கள் அதிர்ச்சியடைந்து விடலாம். ஆம், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மக்களவையில் புதன்கிழமை பேசுகையில், வரும் காலங்களில் ரயில் கட்டணத்தை உயர்த்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அஸ்வினி வைஷ்ணவின் இந்த அறிக்கையை அடுத்து, வரும் காலங்களில் ரயில் கட்டணம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கோவிட்-19க்கு முன் மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் சலுகையை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து ரயில்வே அமைச்சரிடம் மக்களவையில் கேள்விகள் கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர், தற்போது ரயில் மூலம் பயணம் செய்யும் ஒவ்வொரு பயணிக்கும் 55 சதவீத சலுகை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

59000 கோடி மானியம் வழங்கப்பட்டது.
மேலும் பேசிய அவர், தற்போது ஒரு பயணியின் கட்டணத்தில் ரயில்வேயின் ஒரு கிமீ செலவு சுமார் ரூ.1.16 ஆகும். இதற்கு ஒரு கிலோ மீட்டருக்கு 45 முதல் 48 பைசா மட்டுமே ரயில்வே வசூலிக்கிறது. கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களை அளித்த அவர், பயணிகள் கட்டணத்தில் ரயில்வே மூலம் ரூ.59,000 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றார். மேலும் பயணிகள் வசதிகள் குறித்து ரயில்வே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்றார். குறிப்பாக புதிய ரயில்கள் இயக்கம் உட்பட ரயில் பாதை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் ரயில்வேயின் நிலையை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | 7th Pay Commission: 18 மாத அரியர் தொகை விரைவில் கிடைக்கவுள்ளதா? அப்டேட் இதோ

இந்த நிலையில் வரும் காலங்களில் பயணிகளுக்கு பல புதிய வசதிகள் வரவுள்ளன என்றார். அத்துடன் ரயில் கட்டண உயர்வு குறித்து, வரும் காலங்களில் கூடுதல் முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். அத்துடன் நம்முடைய பிரதமர் மோடிக்கு ரயில்வே குறித்து பெரிய தொலைநோக்கு பார்வை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அஸ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்றத்தில் டெல்லியின் எய்ம்ஸ் சர்வர் மீதான சைபர் தாக்குதலுக்கு பதிலளித்த போது, ​​இணைய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பணிகள் பல பரிமாண மட்டத்தில் நடந்து வருவதாகக் கூறினார். இது தவிர, பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

மேலும் படிக்க | 7th Pay Commission: புத்தாண்டில் பம்பர் டிஏ உயர்வு, இன்னும் பல அறிவிப்புகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News