பல்வேறு அரசியல் விமர்சணங்களுக்கு பிறகு மஹாராஸ்டிர தேர்தலில் சிவசேனா தனித்து போட்டியிட முடிவு!
மஹாராஸ்டிர மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி-யில் பாரதீய ஜனதா கட்சி-யுடன் கூட்டணியில் இருந்த சிவசேனா அமைப்பினர். வரும் 2019 ஆம் ஆண்டு மக்களவை மற்றும் மாகாராஸ்டிரா சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
பாஜக-வின் கொள்கைகள் மற்றும் தலைமைகளை குறித்து விமர்சித்த சில நாட்களுக்கு பின்னர், சிவசேனா இறுதியில் தங்களது மாற்று வழியினை முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சிவசேனா-வின் செயற்குழு கூட்டத்தின் போது இதே முடிவினை சிவசேனாவின் மூத்த தலைவரும் பாஜக-வின் முன்னாள் கூட்டாளியுமான சஞ்சய் ரவுத் முன்வைத்தார். இந்த தீர்மானமும் தேசிய செயற்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
Decision of Shiv Sena to go alone in 2019 was taken in the Party's national executive meet, Sanjay Raut had moved a resolution in this regard. pic.twitter.com/yVxfYBHO9w
— ANI (@ANI) January 23, 2018
ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளால் பா.ஜ.க -வால் இந்த முடிவு முழுமையாடையாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது சிவசேனா அதன் பெருமைக்காக போராட வேண்டும், 2019 ல் சுதந்திரமாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று ராவுட் கூறினார்.